Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவகார்த்திகேயனின்’ டாக்டர்’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு !

Webdunia
வியாழன், 11 மார்ச் 2021 (18:19 IST)
சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள டாக்டர் திரைப்படம் மார்ச் 26 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தல் காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது  டாக்டர் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனினும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றும் தேர்தல் முடிந்தவுடன் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் டாக்டர் திரைப்படம் முதலில் திரையரங்குகளில் ரிலீஸாகும் என்பது உறுதி செய்யப்பட்டு இருக்கும் நிலையில் இந்த படம் நெட்பிளிக்ஸில் ரிலீஸ் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது

திரையரங்குகளில் ரிலீசாகி ஒரு மாதம் கழித்து இந்த படம் நெட்பிளிக்ஸில் ரிலீசாகும் என்றும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் டாக்டர் படம் எப்போது ரிலீஸாகும் என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்த நிலையில், வரும் மே மாதம் 2  வாரம் கோடைக்காலத்தில் ரம்ஜான் பண்டிகையொட்டி ரிலீசாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் ஜோடியாக ப்ரியங்கா மோகன் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார் நெல்சன் இயக்கியிருக்கும் இந்த படத்தை கேகேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாகிஸ்தான் மக்கள் அமைதி, மகிழ்ச்சியை விரும்புபவர்கள்: விஜய் ஆண்டனி கருத்தால் பரபரப்பு..!

சூர்யாவின் 46வது படத்தை இயக்குவது, தயாரிப்பது யார்? அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

கவர்ச்சித் தூக்கலான ஆடையில் ஹன்சிகாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

தொட்டு தொட்டு பேசும் சுல்தானா புகழ் பிரியா வாரியரின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

சச்சின் ரி ரிலீஸுக்கு வெற்றி விழா… 10 மடங்கு லாபம்- தயாரிப்பாளர் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments