சிவகார்த்திகேயன் நடிக்கும் பிரின்ஸ் படத்தின் செகண்ட் சிங்கிள் அப்டேட்!

Webdunia
வியாழன், 22 செப்டம்பர் 2022 (15:27 IST)
சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்த ரிலீஸாக வெளியாக உள்ளது பிரின்ஸ் திரைப்படம்.

சிவகார்த்திகேயன், பிரேம்ஜி அமரன், சத்யராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் தமிழ் – தெலுங்கில் பிரின்ஸ் திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கி வருகிறார். தமன் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு, காரைக்குடி, பாண்டிசேரி மற்றும் லண்டன் ஆகிய இடங்களில் நடந்தது.

படத்தில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த நடிகை மரியா ரியோபாஷாப்கா நடிக்கிறார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் படத்தின் முதல் லுக் மற்றும் தலைப்பு நேற்று வெளியாகி கவனம் பெற்றது. அதையடுத்து இன்று இரண்டாவது லுக் போஸ்டர் வெளியானது. மேலும் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி கவனம் பெற்ற நிலையில் இப்போது படத்தின் செகண்ட் சிங்கிள் பாடல் வெளியாக உள்ளது. ஜெஸ்ஸிகா எனத் தொடங்கும் அந்த பாடல் நாளை மாலை 5.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒரு வழியாக பிரச்சனை முடிந்தது.. பிரதீப் ரங்கநாதனின் ஒரு படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு!

முதல் நாளே வெளியேறுகிறாரா வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர்? பொருத்தமில்லாதவர் என வாக்குகள்..!

வித்தியாசமான உடையில் ஒய்யாரமாகப் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

மாடர்ன் உடையில் ஸ்டைலான லுக்கில் அசத்தும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

அடுத்த படத்தின் ஷூட்டிங்குக்குத் தயாரான சூர்யா!

அடுத்த கட்டுரையில்
Show comments