Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிவகார்த்திகேயனின் ஜோடி சமந்தா...?

சிவகார்த்திகேயனின் ஜோடி சமந்தா...?
, திங்கள், 4 மே 2015 (10:50 IST)
கதை கொஞ்சம் பழசாக இருந்தாலும் பரவாயில்லை, காஸ்ட்லியான ஹீரோயின்தான் வேண்டும் என்று கறாராக கூறி வருகிறார் சிவகார்த்திகேயன். அதுவும் ஹன்சிகாவுடன் நடித்த பிறகு இரண்டாம் வரிசை ஹீரோயின் என்றாலே அவருக்கு அலர்ஜியாவதாக தகவல்.
 

 
தற்போது ரஜினி முருகனில் நடித்து வருகிறவர் அடுத்து யாருக்குப் படம் செய்யப் போகிறார் என்பதை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. ஆனால், நாயகி மட்டும் காஸ்ட்லி என்பதில் சிவகார்த்திகேயன் கொள்கை பிடிப்போடு இருக்கிறார். 
 
அடுத்து நம்ம ஜோடி சமந்தாவாக இருக்கட்டுமே என்று அவர் கூறியிருப்பதாக தகவல். தனுஷ், விக்ரம், சூர்யா என்று பிஸியாக நடித்து வரும் சமந்தா என்ன சொல்லப் போகிறார் என்று தெரியவில்லை.

Share this Story:

Follow Webdunia tamil