Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் தொடங்கிய சிவகார்த்திகேயன் & முருகதாஸ் பட ஷூட்டிங்!

vinoth
செவ்வாய், 16 ஜூலை 2024 (09:26 IST)
ஏ ஆர் முருகதாஸ், இப்போது சிவகார்த்திகேயனை ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்துக்கு சிங்கநடை எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களாக சென்னையில் நடைபெற்று வந்தது. படத்தில் கதாநாயகியாக ருக்மினி வசந்த் நடிக்க அனிருத் இசையமைக்கிறார்.

இந்த படத்துக்கு இடையிலேயே முருகதாஸ் அடுத்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான சல்மான் கானோடு இணைந்து சிக்கந்தர் என்ற படத்தை உருவாக்கி வருகிறார். இந்த படத்தின் முதல் கட்ட ஷூட்டிங்கை முடித்துள்ள முருகதாஸ் இப்போது மீண்டும் சிவகார்த்திகேயன் பட ஷூட்டிங்கை தொடங்கியுள்ளார்.

இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது தூத்துக்குடியில் தொடங்கி நடந்து வருகிறது. இந்த ஷூட்டிங் இடைவேளையில்தான் சிவகார்த்திகேயன் திருச்செந்தூர் கோயில் வழிபாடு மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூப்பர் ஸ்டார் ரஜினியின் வைரலாகும் உடற்பயிற்சி வீடியோ: 'பவர்ஹவுஸ்' எனப் புகழும் ரசிகர்கள்!

பிபாஷா பாஸு ஆண்கள் போல உள்ளார்… கிண்டல் அடித்த மிருனாள் தாக்கூர்…!

நீதிமன்றம் போய் தடை வாங்கியும் எந்த பயனும் இல்ல… முதல் நாளே இணையத்தில் வெளியான ‘கூலி’!

ஸ்கேம்ஸ்டர் … புலம்பித் தள்ளும் ரசிகர்கள்… உடைந்ததா லோகேஷ் bubble…?

ரோலக்ஸ் டெம்ப்ளேட்…. சுத்தமாக எடுபடாத அமீர்கான் கேமியோ – ரசிகர்கள் அதிருப்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments