Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முருகதாஸ்- சிவகார்த்திகேயன் படம் தொடங்குவது எப்போது?

Webdunia
ஞாயிறு, 6 ஆகஸ்ட் 2023 (08:16 IST)
தர்பார் படத்தின் தோல்வியால் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் சில வருடங்களாக படம் இயக்காமல் இருந்து வருகிறார். இடையில் அவர் அக்‌ஷய் குமார் மற்றும் ஒரு குரங்கை வைத்து ஒரு பிரம்மாண்ட படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அந்த படம் அடுத்த கட்டத்துக்கு செல்லவில்லை.

இதனால் மீண்டும் ஹிட் படம் கொடுத்து கம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் அவர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஒரு படத்தை உருவாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை ஸ்பைடர் படத்தின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்துக்கான வேலைகள் இந்த ஆண்டு இறுதியில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தில் மிருனாள் தாக்கூர் கதாநாயகியாக நடிக்க உள்ளதாகவும், அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

6 படங்களின் கதையும் ஒரே மாதிரியா? அதில் ரஜினி, அஜித் படங்களும் அடக்கம்.. ஆச்சரிய தகவல்..!

சிம்பு - வெங்கட்பிரபு படத்திற்கு வாய்ப்பே இல்லை.. சிம்புவின் லைன் - அப்பில் ‘மாநாடு 2’ இல்லையா?

காளி வேஷம்.. கையில சிலுவை.. ஆபாச நடனம்! - சர்ச்சைக்குள்ளான ஆல்பம் பாடல்!

மொட்டைத்தலையுடன் அஜித் கெட்டப்.. புதிய படத்திற்கான கேரக்டர் லுக்கா?

பிரியா வாரியரின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments