Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடங்கும் போதே எழுந்த சிக்கல்.. சிவகார்த்திகேயன் படத்துக்கு அவுட்டோர் யூனிட் சங்கம் எதிர்ப்பு!

vinoth
வெள்ளி, 16 பிப்ரவரி 2024 (07:53 IST)
தர்பார் தோல்விக்குப் பிறகு மூன்று ஆண்டுகள் எந்த படமும் இயக்காமல் இருந்த ஏ ஆர் முருகதாஸ், இப்போது சிவகார்த்திகேயனை வைத்து தனது அடுத்த படத்தைத் தொடங்கியுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் நேற்று முன்தினம் சென்னையில் பூஜையோடு தொடங்கியது. படத்தில் கதாநாயகியாக ருக்மினி வசந்த் நடிக்க அனிருத் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங்குக்காக வெளிமாநிலத்தில் இருந்து அவுட்டோர் யூனிட் வரவழைத்து ஷூட்டிங்கை நடத்தியுள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பே வெளிமாநில அவுட்டோர் யூனிட்டை தமிழ் சினிமா ஷூட்டிங்குக்கு பயன்படுத்தக் கூடாது என ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதை மீறி இந்த படத்தின் ஷூட்டிங்கில் வெளிமாநில அவுட்டோர் யூனிட் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் இன்றிலிருந்து எந்தவொரு தமிழ் சினிமா மற்றும் சீரியல்களுக்கு அவுட்டோர் யூனிட் வழங்கமாட்டோம் என தென்னிந்திய அவுட்டோர் யூனிட் உரிமையாளர்கள் சங்கம் தயாரிப்பாளர் சங்கத்துக்கு கடிதம் எழுதியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் திரைக்கு வரும் 'உயிருள்ளவரை உஷா' திரைப்படம்.. டி ராஜேந்தர் அறிவிப்பு..!

தமிழில் அறிமுகமாகும் ‘கே ஜி எஃப்’ இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர்!

தயாரிப்பாளருக்குத் திருப்தியளிக்காத ஜெயம் ரவியின் ‘ஜீனி’… மீண்டும் ஷூட்டிங்கா?

வேலை நாட்களில் சுணக்கம் காட்டும் கூலி.. ஏழாவது நாள் வசூல் எவ்வளவு?

கீர்த்தி சுரேஷுக்கு வில்லனாகும் மிஷ்கின்?

அடுத்த கட்டுரையில்
Show comments