Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“அந்த 60 நிமிடமும் வாழ்நாளில் மறக்க முடியாது”… ரஜினியை சந்தித்த பின் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி

Webdunia
திங்கள், 30 மே 2022 (12:09 IST)
நடிகர் சிவகார்த்திகேயன் ரஜினிகாந்தை சந்தித்து ஆசி பெற்றுள்ளதாகக் கூறியுள்ளார்.

சிவகார்த்திகேயன் நடித்து சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் டான். இதில் பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். கல்லூரி வாழ்க்கையை மையமாக கொண்டு வெளியாகியுள்ள இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தை சமீபத்தில் திரையரங்கில் பார்த்த நடிகர் ரஜினிகாந்த், படக்குழுவினரை போனில் அழைத்து வாழ்த்தியுள்ளார். மேலும் இதன் க்ளைமேக்ஸை கண்டு தான் கண்ணீர் விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த தகவலை சிவகார்த்திகேயன் ஒரு நேர்காணலில் பகிர்ந்திருந்தார். அதையடுத்து தற்போது சிவகார்த்திகேயன் ரஜினிகாந்துடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். மேலும் அதில் “இந்திய சினிமாவின் ‘டான்’ உடன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாரை சந்தித்து அவரின் ஆசியைப் பெற்றேன். அந்த 60 நிமிடமும் வாழ்நாள் முழுக்க நினைவில் இருக்கும். நன்றி தலைவா. உங்களின் அருமையான நேரத்துக்கும் பாராட்டுகளுக்கும். #DON” என்று கூறியுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

யோகி பாபு நடிப்பில் உருவாகும் ‘சட்னி சாம்பார்’ வெப் சீரிஸ் ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!

விடுதலை 2 படத்தில் எனக்கும் மஞ்சு வாரியருக்கும் ரொமான்ஸ் இருக்கு- விஜய் சேதுபதி தகவல்!

மகாராஜா படம் பார்த்துட்டு என் மனைவி என்ன சொல்லப்போறாரோ தெரியல- நடிகர் சிங்கம் புலி!

சர்ச்சையைக் கிளப்பிய எம் எஸ் பாஸ்கரின் பேச்சு… ப்ளுசட்ட மாறன் போட்ட பதிவு!

ஒரே ஒரு அப்டேட்தான் கொடுப்பேன், எல்லாத்தையும் கேக்காதீங்க- விடாமுயற்சி குறித்து அர்ஜுன்!

அடுத்த கட்டுரையில்
Show comments