Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமரன் பிளாக்பஸ்டர் ஹிட்டால் ‘மதராஸி’ படத்தின் பிஸ்னஸில் ஏற்றம்!

vinoth
செவ்வாய், 20 மே 2025 (10:12 IST)
தர்பார் படத்துக்குப் பிறகு மூன்று ஆண்டுகள் எந்த படமும் இயக்காமல் இடைவேளை எடுத்துக் கொண்டார் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ். அதையடுத்து இப்போது சிவகார்த்திகேயனை வைத்து மதராஸி என்ற படத்தை இயக்கி வருகிறார். இதற்கிடையில் முருகதாஸ், சல்மான் கானை வைத்து ‘சிக்கந்தர்’ என்ற படத்தை இயக்கி ரிலீஸ் செய்ய அந்த படம் படுதோல்வி அடைந்தது.

இதையடுத்து தற்போது அவர் மீண்டும் சிவகார்த்திகேயன் படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். தற்போது படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் தொடங்கியுள்ளது. இந்த படம் செப்டம்பர் 5 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் தற்போது பிஸ்னஸ் தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் தமிழ் நாடு திரையரங்க விநியோக உரிமையை சுமார் 65 கோடி ரூபாய் என்று விலை நிர்ணயம் செய்துள்ளாராம் தயாரிப்பாளர். இவ்வளவு பெரிய தொகையை அவர் நிர்ணயம் செய்ய சிவகார்த்திகேயனின் முந்தையப் படமான அமரன் படத்தின் வெற்றிதான் காரணம் என சொல்லப்படுகிறது. அந்த படம் தமிழ்நாட்டில் மட்டும் தயாரிப்பாளரின் பங்காக சுமார் 75 கோடி ரூபாய் சம்பாதித்துக் கொடுத்துள்ளதாம்.

மதராஸி படத்தில் கதாநாயகியாக ருக்மினி வசந்த் நடிக்க அனிருத் இசையமைக்கிறார். முக்கியக் கதாபாத்திரங்களில் வித்யுத் ஜம்மால், விக்ராந்த் மற்றும் ஜெயராம் ஆகியோர் நடிக்கின்றனர். பெரும்பாலான படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக சொல்லப்படுகிறது. இந்த படம் முருகதாஸுக்கு தமிழ் சினிமாவில் ஒரு கம்பேக் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜெண்டில் வுமன் இயக்குனரின் அடுத்த படத்தில் விஜய் ஆண்டனி… டைட்டில் அறிவிப்பு!

சமீப வருடங்களில் சிறந்த சினிமா அனுபவம்.. டூரிஸ்ட் பேமிலி படத்தைப் பாராட்டிய ராஜமௌலி!

மீண்டும் இணையும் வெற்றிக் கூட்டணி… எழில் இயக்கத்தில் விஷ்ணுவிஷால்!

ஆகஸ்ட் 29 ஆம் தேதி நாங்க கல்யாணம் பண்ணிக்கப் போறோம்… மேடையில் அறிவித்த விஷால் & தன்ஷிகா!

தக்லைப் படத்தின் சென்சார் தகவல் மற்றும் ரன்னிங் டைம் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments