Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெற்றி என்பது ஒரு பயணமே.. முடிவு இல்லை – மாவீரன் சக்ஸஸ் மீட்டில் சிவகார்த்திகேயன்!

Webdunia
வெள்ளி, 21 ஜூலை 2023 (07:56 IST)
சிவகார்த்திகேயன் நடிப்பில்  வெளியாகியுள்ள மாவீரன் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் இந்த படம் நல்ல வசூலைப் பெற்று வருகிறது. வெளியாகி ஒரு வாரத்தில் 50 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் முதல் பாதி எல்லோருக்கும் பிடித்திருப்பதாகவும், ஆனால் இரண்டாம் பாதியில் சொதப்பி இருப்பதாகவும் ரசிகர்கள் கருத்துகள் வந்துள்ளன.

இந்நிலையில் நேற்று இந்த படத்தின் சக்ஸஸ் மீட் சென்னையில் நடந்தது. அப்போது பேசிய நடிகர் சிவகார்த்திகேயன் “இந்த படத்தின் வெற்றி ரொம்பவே முக்கியமானது. பிரின்ஸ் படம் தோல்வி படமாக அமைந்ததால் இல்லை. மிஸ்டர் லோக்கல் வந்துச்சு, அதன் பின்னர்தான் நம்ம வீட்டுப்பிள்ளை வந்தது. ஹீரோ வந்தது அதன் பின்னர்தான் டாக்டர் திரைப்படம் வந்தது.

அதே போல பிரின்ஸ் படத்துக்கு பிறகு மாவீரன் வந்துள்ளது. வெற்றி தோல்வி என்பது வாழ்க்கையில் வந்து போகும். வெற்றி என்பது ஒரு பயணமே. அதுவே முடிவில்லை. அதனால் இந்த பயணத்தில் நாம் என்ன கற்றுக் கொள்கிறோம் என்பதுதான் முக்கியம்.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித்க்கு வைக்கப்பட்ட பிரம்மாண்ட கட் அவுட் சரிந்து விபத்து! - அதிர்ச்சி வீடியோ!

விண்வெளிக்கு செல்லும் அல்லு அர்ஜுன்? தமிழில் ஒரு Interstellar? அட்லீ செய்யப்போகும் மேஜிக்!?

ஆட்டோகிராப் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. பிரபல தயாரிப்பாளர் சேரனுக்கு வாழ்த்து..!

அட இருங்க் பாய்..! லியோவை முறியடித்த குட் பேட் அக்லி ட்ரெய்லர்!

23 ஆண்டுக்கு பின் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரபல நடிகர்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments