புதிய படத்தில் விக்னேஷ் சிவனோடு இணையும் சிவகார்த்திகேயன்

Webdunia
வெள்ளி, 19 ஜனவரி 2018 (17:54 IST)
சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார். பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்க உள்ளது.
விக்னேஷ் சிவனின் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் இப்படத்தைத் தயாரித்த ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் விக்னேஷ் சிவனின் அடுத்த படத்தையும் தயாரிக்கிறது.
 
இந்நிலையில் பெயரிடப்படாத இப்புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்துக்கு  ஒரு படம் செய்து தருவதாக சிவகார்த்திகேயன் ஒப்புக் கொண்டிருந்தார். அது விக்னேஷ் சிவன் படத்தின் மூலமாக இறுதி செய்யப்பட்டுள்ளது. அனிருத் இப்படத்துக்கு இசையமைக்கிறார். நாயகி, தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும். படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்கும்  எனவும் கூறப்படுகிறது.
 
தற்போது சிவகார்த்திகேயன் பொன்.ராம் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மகிழ் திருமேனி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஷ்ரத்தா கபூர்!

டிசம்பர் மாதம் கேரளாவில் தொடங்கும் சூர்யாவின் 47 ஆவது படத்தின் ஷூட்டிங்!

எனக்கெதிராக போர் நடந்தால் போராட வேண்டும்… வருங்கால கணவர் குறித்து ராஷ்மிகா விருப்பம்!

கல்கி & ஸ்பிரிட் படத்தில் இருந்து வெளியேறியது ஏன்?... முதல் முறையாக மௌனம் கலைத்த தீபிகா படுகோன்!

கார்த்தியின் ‘வா வாத்தியார்’ ரிலீஸ் தேதியில் மாற்றம்?... தெலுங்கு டைட்டில் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments