Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவகார்த்திகேயனின் ’ஹீரோ’ டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Webdunia
புதன், 11 டிசம்பர் 2019 (21:47 IST)
சிவகார்த்திகேயன் நடிப்பில் இரும்புத்திரை இயக்குநர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் திரைப்படம் ’ஹீரோ’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது 
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த படத்தின் ரிலீஸ் தேதி டிசம்பர் 20 என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி இந்த படத்தின் டீஸர் மற்றும் பாடல்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததால் இந்த படம் நிச்சயம் வெற்றியடையும் என படக்குழுவினர் எதிர்பார்த்தனர் 
 
இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி டிசம்பர் 13 என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சிவகார்த்திகேயன் ரசிகர்கள் இந்த தகவலை ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்
 
சிவகார்த்திகேயன் ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கும் இந்த படத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்திற்குப் பின்னர் ஹீரோ திரைப்படமும் சிவகார்த்திகேயனுக்கு வெற்றிப்படமாக அமையுமா? என்பதை டிசம்பர் 20 வரை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments