Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரஜினியின் சம்மதமும் சிவ கார்த்திகேயனின் சந்தோஷமும்

ரஜினியின் சம்மதமும் சிவ கார்த்திகேயனின் சந்தோஷமும்
, புதன், 29 அக்டோபர் 2014 (11:05 IST)
திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் சிவ கார்த்திகேயன் நடிக்கும் ரஜினி முருகன் படக்குழு தலைகால் புரியாத சந்தோஷத்தில் உள்ளது. முக்கியமாக சிவ கார்த்திகேயன்.
 
சமீபத்தில் இயக்குனர் பைசல் மே ஹு ரஜினிகாந்த் என்ற பெயரில் படமெடுக்க, ஆபாசப் படத்துக்கு என்னுடைய பெயரை வைக்கக் கூடாது என்று கோர்ட்டுக்குப் போனார் ரஜினி. அதனால் நமது படத்துக்கு அவர் அனுமதி தருவாரா, இல்லை பெயர் பிரச்சனையை கிளப்புமா என்று ரஜினி முருகன் படக்குழு கவலைப்பட்டது.
 
இந்நிலையில் திருப்பதி பிரதர்ஸ் விஷயத்தை ரஜினியின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். அவரும் தனது சம்மதத்தை தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்துதான் இந்த மகிழ்ச்சி.
 
இந்த மாதம் 30 -ஆம் தேதி காரைக்குடியில் படப்பிடிப்பை தொடங்குகின்றனர். வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை இயக்கிய பொன்ராம் படத்தை இயக்குகிறார்.

Share this Story:

Follow Webdunia tamil