Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவகார்த்திகேயனின் டாக்டர் ரிலீஸ் எப்போது? பரபரப்பு தகவல்

Webdunia
வெள்ளி, 15 ஜனவரி 2021 (08:49 IST)
சிவகார்த்திகேயனின் டாக்டர் ரிலீஸ் எப்போது? பரபரப்பு தகவல்
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகிய டாக்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது 
 
இயக்குனர் நெல்சன் அடுத்ததாக விஜய்யின் அடுத்த படத்தை இயக்க இருப்பதால் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகளை அவர் இரவுபகலாக கவனித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி டாக்டர் திரைப்படம் தமிழ் புத்தாண்டு தினத்தில் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது 
 
இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் 80 சதவீதம் முடிந்துவிட்டதாகவும் மீதி பணிகளை விரைவாக முடித்து சென்சாருக்கு அனுப்பி தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதனால் தமிழ் புத்தாண்டு தினத்தில் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய விருந்து காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரித்திசிங், ஷரத் கெல்கர் இஷா கோபிகர் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். விஜய் கார்த்திக்கண்ணன் ஒளிப்பதிவில் நிர்மல் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது

தொடர்புடைய செய்திகள்

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

அடுத்த கட்டுரையில்
Show comments