Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யப்பா... அண்ணன் தம்பியா சந்தோஷமாக இருக்கோம் - சிவ கார்த்திகேயனுடனான மோதல் குறித்து தனுஷ்

Webdunia
புதன், 4 மார்ச் 2015 (11:44 IST)
சம்பந்தப்பட்ட சிவ கார்த்திகேயன், எனக்கும் தனுஷுக்கும் இடையில் எந்த சண்டையும் இல்லை என்று மேடைக்கு மேடை சொன்னாலும் யாரும் நம்பத் தயாராக இல்லை. அதை அவர் - தனுஷ் - சொல்லட்டும் என்று காத்திருந்தனர். இப்போது தனுஷே எங்களுக்குள் எதுவும் இல்லை என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில், காக்கி சட்டையின் பிரமோஷன் நிகழ்ச்சியில் சிவ கார்த்திகேயன் கலந்து கொண்டார். அப்போது போனில் அவரிடம் பேசினார் தனுஷ். 
 
வழக்கமான கேள்விகளெல்லாம் கேட்டுட்டாங்களா என்று ஜாலியாக பேசத் தொடங்கியவர், யப்பா... அண்ணன், தம்பியா சந்தோஷமா இருக்கோம். நீங்களா ஏதாவது பேசி கெடுத்திடாதீங்க என்றார். மேலும், 3 படத்திலிருந்தே சிவ கார்த்திகேயனின் நடிப்பு எனக்குப் பிடிக்கும். அதனால்தான் அவருக்கு வாய்ப்பு கொடுத்தேன். எல்லோரும் ஆச்சரியப்படுகிற அளவில் அவரோட வளர்ச்சி இருக்கு. இனியும் அப்படிதான் இருக்கும் என்றார்.
 
ஆக, எங்களுக்குள் சண்டையில்லை என்று இருவருமே கூறிவிட்டனர். இனியாவது மீடியா சும்மா இருக்குமா பார்ப்போம்.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments