மீண்டும் புத்துணர்ச்சி பெறும் சிவகார்த்திகேயன் - சிபி சக்கரவர்த்தி படம்.. இசையமைப்பாளர் இவரா?

Siva
புதன், 6 ஆகஸ்ட் 2025 (18:28 IST)
சிவகார்த்திகேயன் நடிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கிய 'டான்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து, மீண்டும் இந்த கூட்டணி ஒரு புதிய படத்தில் இணையவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. 
 
ஆனால், சிவகார்த்திகேயன் 'மதராசி', 'பராசக்தி' உள்ளிட்ட படங்களில் பிஸியாக இருந்ததால், சிபி சக்கரவர்த்தியின் திரைப்படம் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது, அந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருப்பதாகவும், இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
இந்த படத்தின் அக்டோபர் மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கு இசையமைக்க சாய் அபிநயங்கார் ஒப்பந்தம் செய்யப்படலாம் என்றும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திவ்யபாரதியின் க்யூட் & ஹாட் புகைப்படத் தொகுப்பு!

சம்யுக்தா மேனனின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

பாலிவுட் அரசியலால் இரண்டு வருடங்களை பாசில் இழந்தார்… அனுராக் காஷ்யப் வேதனை!

வெற்றிமாறன் என்னைப் பாராட்டவே மாட்டார்… ஆனால் அந்த படம் பார்த்துவிட்டு … ஆண்ட்ரியா பகிர்ந்த தகவல்!

மோனிகா பாடலைக் கிண்டலடித்த இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments