மீண்டும் தொடங்கிய சிவகார்த்திகேயனின் அமரன் பட ஷூட்டிங்!

vinoth
ஞாயிறு, 28 ஏப்ரல் 2024 (07:40 IST)
சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசனனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் நிறுவன ட்தயாரிப்பில் உருவாகி வரும் அமரன் திரைப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பையும் விமர்சனங்களையும் பெற்றது. இந்த திரைப்படம் சென்னையைச் சேர்ந்த மறைந்த கேப்டன் முகுந்த் வரதராஜனின் கதை என்று சொல்லப்படுகிறது.

அமரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர் ஏராளமான காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் டீசரில் இருந்து இது காஷ்மீர் தீவிரவாதிகளின் கதை என்றும் காஷ்மீரில் உள்ள அப்பாவி பொதுமக்களை இந்திய ராணுவ வீரர்கள் தங்கள் உயிரைக் கொடுத்து எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பதை கதையம்சம் கொண்டதாக இருக்கும் என்று தெரிகிறது. இந்த படத்துக்கு இதுவரை சிவகார்த்திகேயன் படத்துக்கு இல்லாத அளவுக்கு 60 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் கடைசி கட்ட ஷூட்டிங் இப்போது மூனார் பகுதியில் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காஷ்மீரில் எடுக்கப்பட்ட காட்சிகளை மேட்ச் செய்யும் விதமாக மூனாரில் ஒரு ஆக்‌ஷன் காட்சியைப் படமாக்க உள்ளார்களாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மிருனாள் தாக்கூரின் கண்கவர் புகைப்படத் தொகுப்பு!

நேஷனல் க்ரஷ் ராஷ்மிகாவின் அசத்தல் புகைப்படத் தொகுப்பு!

அஜித்தின் அடுத்த பட இயக்குனர் லிஸ்ட்டில் இணைந்த மனு ஆனந்த்?

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ‘டாக்ஸிக்’ படக்குழு!

எனக்கும் மாதம்பட்டி ரங்கராஜுக்கும் ஆண் குழந்தை பிறந்துள்ளது… ஜாய் கிரிசில்டா அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments