Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'பியார் பிரேமா காதல்' கோபப்பட்ட சிவா

Webdunia
வியாழன், 2 ஆகஸ்ட் 2018 (14:52 IST)
இளன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'பியார் பிரேமா காதல்'. இதில், 'பிக்பாஸ்' புகழ் ரைஸா மற்றும் ஹரிஷ் ஜோடியாக நடித்துள்ளனர். ஒய்.எஸ்.ஆர் பிக்சர்ஸ் மற்றும் கே புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்துக்கு யுவனும் ஓர் தயாரிப்பாளர்.



இதையடுத்து இப் படத்தின் பாடல்கள், டிரெய்லர் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது.

இந்நிலையில், நடிகர் சிவா தனது டுவிட்டர் பக்கத்தில் படம் குறித்து விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.



அதில், பியார் பிரேமா காதல் படத்தின் மீதான கோபத்தை வெளிப்படுத்தி இருந்தார். சிவாவை வைத்து படம் ரிலீஸ் செய்வதாக கூறிவிட்டு, இப் படம் வெளியீடு குறித்து தன்னை அறிவிக்குமாறு கூறிவதா? என்று கோபத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தப் படம் இன்னும் 9 நாட்களில் வெளியாகிறதாம். அதை வித்தியாசமாக, ரசிகர்களிடம் தெரிவிக்க, படக்குழுவினர் இப்படி ஒரு ஏற்பாட்டை செய்திருப்பதாக தெரிகிறது.

காதல் திரைப்படமாக உருவாகியிருக்கும் 'பியார் பிரேமா காதல்' வரும் 10ம் தேதி ரிலீசாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கதையும் தெரியாது… பாடலுக்கான சூழலும் தெரியாது.. ஆனாலும் நான் பாட்டு போட்டிருக்கேன் – இளையராஜா பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

எம்புரான் படத்துக்குத் தடைகோரிய பிரமுகரை சஸ்பெண்ட் செய்த கேரள பாஜக!

தெலுங்கு இயக்குனரின் இயக்கத்தில் நடிக்கிறாரா சல்மான் கான்?

சர்தார் திரும்ப வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தோம்… கார்த்தி மகிழ்ச்சி!

சூர்யா 45 பட ஷூட்டிங்கில் நடந்த விபரீதமான சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments