Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊதா சட்டை மாறனுக்கு ஆதரவாகக் குரல்கொடுத்த பின்னணிப் பாடகர் ஸ்ரீநிவாஸ்

Webdunia
திங்கள், 28 ஆகஸ்ட் 2017 (18:23 IST)
சினிமா விமர்சகர் ஊதா சட்டை மாறனுக்கு ஆதரவாக, பிரபல பின்னணிப் பாடகர் ஸ்ரீநிவாஸ் ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்துள்ளார்.



 
அஜித் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் ‘விவேகம்’. இந்தப் படத்தை சினிமா விமர்சகரான ஊதா சட்டை மாறன், கடுமையாக எதிர்மறை விமர்சனம் செய்திருந்தார். எனவே, அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி, சினிமா இயக்குநர்கள் உள்ளிட்ட பல பிரபலங்கள் ஊதா சட்டை மாறனைத் திட்டி வருகின்றனர்.

இந்நிலையில், பிரபல பின்னணிப் பாடகரான ஸ்ரீநிவாஸ், மாறனுக்கு ஆதரவாக ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்துள்ளார். “எல்லாப் படத்தையும் எல்லாருக்கும் விமர்சனம் செய்ய உரிமை உண்டு. இந்த தொழில்நுட்ப உலகில் யாரும் இதைத் தடுக்க முடியாது. அவருடைய பல படங்களின் விமர்சனங்களை நான் பார்த்திருக்கிறேன். அவருடைய கருத்தை நான் ஏற்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார் ஸ்ரீநிவாஸ்.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments