பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சூப்பர் சிங்கர் 6’ நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர் செந்தில் கணேஷ்.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் இசைக் கலைஞரான இவர், கிராமிய மற்றும் நாட்டுப்புறபாடல்களை பாடி மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளார். இந்நிலையில் செந்தில் கணேஷ் தனது மனைவி ராஜலட்சுமியுடன் இணைந்து பாடிய ‘சின்ன மச்சான்’ பாடல், உலகம் முழுவதும் சூப்பர் ஹிட்டாகியுள்ளது.
அந்தப் பாடலை, பிரபுதேவா - நிக்கி கல்ராணி நடித்துள்ள ‘சார்லி சாப்ளின் 2’ படத்தில் பயன்படுத்தியுள்ளனர்.
‘சின்ன மச்சான்’ பாடலை எழுதிய செல்லத் தங்கையா. ‘கரிமுகன்’ என்ற படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் செந்தில் கணேஷ் ஜோடியாக, கேரளாவைச் சேர்ந்த காயத்ரி என்ற பெண் நடித்துள்ளார்.
“முகம் தெரியாத இரண்டு பேருக்குள் நடக்கும் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து, முகம் தெரிந்த இரண்டு பேருக்குள் என்ன மாதிரியான பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது? அதில் இருந்து எப்படி அவர்கள் வெளியே வந்தார்கள்?” என்பதுதான் இந்தப் படத்தின் கதை.
புதுக்கோட்டை, கோட்டைபட்டினம், தேவிபட்டினம் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.