Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் ராதாரவிக்கு எதிராக ’பாடகி சின்மயி’ கோரிக்கை !

Webdunia
திங்கள், 2 டிசம்பர் 2019 (15:05 IST)
நடிகர் ராதாரவி சமீபத்தில் பாஜகவில் இணைந்தார். இந்நிலையில் பிரபல பின்னணிப் பாடகி சின்மயி,  இதுகுறித்து மத்திய பெண்கள் நலத்துறை அமைச்சரிடம் ஒரு கோரிக்கை ஒன்று விடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் எல்லோருக்கும் அறிமுகமானவர் பிரபல நடிகர் ராதாரவி. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அவர்  ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
 
அப்போது, திமுகவின் நட்சத்திரப் பேச்சாளராக இருந்த  ராதாரவி, கொலையுதிர்காலம் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியதால் , திமுக தலைவர் ஸ்டாலினால் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
 
அதையடுத்து, ராதாரவி அதிமுக கட்சியிலேயே மீண்டும் இணைந்தார். இந்நிலையில் ,கடந்த 30 ஆம் தேதி , பாஜக தேசிய செயல்தலைவர் ஜே.பி. நட்டா தமிழகத்துக்கு வந்தபோது, அவர்  முன்னிலையில் ராதாரவி பாஜகவில் இணைந்தார்.
 
இந்நிலையில், நடிகர் ராதாரவி பாஜகவில் இணைந்தது குறித்து, பாடகி சின்மயி, மத்திய பெண்கள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு டேக் செய்து தனது டுவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பி உள்ளார்.
 
அதில், நடிகர் ராதாரவி டப்பிங் யூனியனில் பெண்கள் பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்தால் அவர்களுக்கு தடை விதித்து விடுவார். எனவே,  நடிகர் ராதாரவியை உங்கள் கட்சியில் இணைத்திருப்பதால் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்.. என கேள்வி எழுப்பியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நாளை வெளியாகிறது விடாமுயற்சி படத்தின் முதல் சிங்கில் ‘Sawadeeka’!.. டிரைலர் எப்போது?

ஈரம் பட கூட்டணியின் அடுத்த படம் ‘சப்தம்’.. ரிலீஸ் தேதி இதுதான்!

நடிகர் சிவராஜ்குமாருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்தது…!

விடாமுயற்சி படத்தின் அனைத்துப் பணிகளையும் முடித்துக் கொடுத்த அஜித்!

ஒரு மாபெரும் எழுத்துக்கலைஞனை இழந்திருக்கிறோம்.. கமல்ஹாசனின் சோக பதிவு..!

அடுத்த கட்டுரையில்