Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமல் படங்களுக்கு இனி கவலையில்லை... ஏன் தெரியுமா?

Webdunia
திங்கள், 19 பிப்ரவரி 2018 (15:24 IST)
விமலின் ‘மன்னர் வகையறா’ ரிலீஸாக உதவிசெய்த சிங்கார வேலன், இனி விமலின் அனைத்து படங்களுக்கும் பைனான்ஸ் செய்யப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

 
விமல் தயாரித்து, நடித்து படம் ‘மன்னர் வகையறா’. பூபதி பாண்டியன் இயக்கிய இந்தப் படத்தில், ‘கயல்’ ஆனந்தி ஹீரோயினாக நடித்திருந்தார். இந்தப் படத்தின் ரிலீஸின்போது ‘ஜன்னலோரம்’ பட இழப்பீடு விவகாரம் தலைதூக்க, உடனடியாகத் தன்னிடமிருந்த இரண்டு கோடி ரூபாயைக் கொடுத்து படம் ரிலீஸாக உதவினார் விநியோகஸ்தரும், தயாரிப்பாளருமான சிங்கார வேலன்.
 
தொடர்ந்து, விமல் - வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள ‘கன்னி ராசி’ படத்தின் வெளியீட்டு உரிமையையும் அவர் வாங்கியுள்ளார். அத்துடன், இனி விமல் நடிக்கும் படங்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கு, பைனான்ஸ் கொடுத்து உதவவும் முன்வந்துள்ளார் சிங்கார வேலன். அப்படி பைனான்ஸ் கொடுக்கும் படங்களின் வெளியீட்டு உரிமையையும் தானே வாங்கிக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிங்டம் படத்துக்கு எதிர்ப்பு… ராமநாதபுரத்தில் காட்சிகள் ரத்து.. பின்னணி என்ன?

பாடல்களை மெருகேற்ற chat GPT ஐப் பயன்படுத்துகிறாரா அனிருத்?... அவரே சொன்ன பதில்!

தேசிய விருதை வாங்குவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை… ஊர்வசி பதில்!

பராசக்தி படத்தில் நான் ஏன் நடிக்கவில்லை… முதல் முறையாக மனம் திறந்த லோகேஷ்!

நடிகை ரம்யா குறித்து இன்ஸ்டாவில் ஆபாச கருத்து: 48 பேர் மீது வழக்கு.. 3 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments