Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே ஒரு வில்லன் கதாபாத்திரத்துக்கே இப்படியா?.. அலறியடித்து ஓடும் சிங்கம்புலி!

vinoth
திங்கள், 24 மார்ச் 2025 (07:37 IST)
விஜய் சேதுபதியின் 50 ஆவது படமான மகாராஜா கடந்த ஆண்டு வெளியாகி நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று சூப்பர் ஹிட் படமானது. இந்த படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்ராஜ் நட்டி மற்றும் பாய்ஸ் மணிகண்டன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். ஆனால் அவர்களை எல்லாம் தாண்டி ஸ்கோர் செய்தது என்றால் அது நகைச்சுவை நடிகர் சிங்கம் புலிதான்.

இதுவரை நகைச்சுவை நடிகராக அறியப்பட்ட சிங்கம்புலி இந்த படத்தில் ஒரு பாலியல் வல்லுறவாளனாக நடித்து ரசிகர்களை திடுக்கிட வைத்துள்ளார். படத்தில் அவர் ஒரு சிறுமியை வல்லுறவு செய்யும் காட்சிகள் அவர் மீது கோபம் வரவழைக்கும் விதமாக உள்ளன. இந்நிலையில் இந்த படத்தால் தன்னுடைய இமேஜ் எப்படி மாறியுள்ளது என்பது பற்றி சிங்கம்புலி பேசியுள்ளார்.

அதில் “இதுவரை என்னை எல்லோரும் நகைச்சுவை நடிகராக அறிந்து வைத்திருந்தார்கள். அதனால் பார்த்தவுடன் சிரிப்பார்கள். ஆனால் மகாராஜா படத்துக்குப் பிறகு என்னை பார்த்தால் பயப்பட ஆரம்பித்துவிட்டார்கள். அதனால் இனிமேல் வில்லன் வேடங்களில் நடிக்கப் போவதில்லை. அதுமட்டுமில்லாமல் குழந்தைகளுக்கான 3டி படம் ஒன்றையும் விரைவில் இயக்கப் போகிறேன்” என அறிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யா மற்றும் ஜோதிகா கோபித்துக் கொள்ளமாட்டார்கள் என்று நினைக்கிறேன் – ட்ரோல் குறித்து சந்தானம்!

இயக்குனர் ராம் &மிர்ச்சி சிவா கூட்டணியின் ‘பறந்து போ’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கில்லிக்குப் பிறகு சச்சின்தான்… ரி ரிலீஸ் வசூல் எவ்வளவு தெரியுமா?

இது வெற்றி கொண்டாடும் காலமல்ல, சிந்திக்கும் தருணம்.. கமல்ஹாசன் அறிக்கை..!

மாடர்ன் உடையில் ஸ்டைலான லுக்கில் அசத்தும் அதிதி ஷங்கர்… கலக்கல் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்