Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் தள்ளிப் போகும் வாலு

மீண்டும் தள்ளிப் போகும் வாலு
, திங்கள், 4 மே 2015 (09:01 IST)
வாலு மே 9 -ஆம் தேதி வெளியாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து விளம்பரங்களும் வெளியிட்டனர். இந்நிலையில், வாலு மீண்டும் தள்ளிப் போகிறது.
 

 
சிம்புவின் சின்சியாரிட்டி காரணமாக அவர் தொடங்கும் படங்கள் முடிய இரணடிலிருந்து மூன்று வருடங்கள் எடுத்துக் கொள்ளும். வாலு படமும் அப்படியே. ஒருவழியாக படத்தை முடித்து திரைக்கு கொண்டு வரலாம் என்றால் கண்ணுக்கு தெரியாத (நமது கண்ணுக்கு) பல முட்டுக்கட்டைகள்.
 
இதோ வருகிறது அதோ வருகிறது என்று ஒருவழியாக மே 9 படம் திரைக்கு கண்டிப்பாக வரும் என்றனர். எதிர்பார்த்தது போல் அன்றும் படம் திரைக்கு வரவில்லையாம். என்ன காரணம் என்பது தெரியவில்லை. எப்படியும் ஜுலையில் படத்தைப் பார்த்தால் போதும் என்கிறது கோடம்பாக்கம்.

Share this Story:

Follow Webdunia tamil