Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிம்புதேவனின் அடுத்த படத்தில் 6 கதை, 6 நடிகர்கள், 6 டெக்னீஷியன்கள்

Webdunia
திங்கள், 20 மே 2019 (19:55 IST)
தளபதி விஜய் நடித்த 'புலி', வைகைப்புயல் வடிவேலு நடித்த 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி', உள்பட ஒருசில படங்களை இயக்கியவர் இயக்குனர் சிம்புதேவன். இவர் இயக்கிய 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி 2' திரைப்படம் ஒருசில காரணங்களால் பாதியில் நின்றுவிட தற்போது அவர் அடுத்த படத்தை தொடங்கியுள்ளார்.
 
சிம்புதேவனின் புதிய படத்தில் ஆறு கதை உள்ளது. ஆறு கதையும் ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் இல்லாமல் ஆறு ஹீரோக்கள், ஆறு கேமிராமேன், ஆறு எடிட்டர்கள், ஆறு ஹீரோயின், ஆறு இசையமைப்பாளர்கள் என புதுமையாக உருவாக்கப்படவுள்ளது. இதில் நான்கு ஹீரோக்களாக  ஹரிஷ் கல்யாண், சிவா, கலையரசன், வெங்கட்பிரபு ஆகியோர்கள் நடிக்கவிருப்பதாகவும் இன்னும் இரண்டு ஹீரோக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது
 
இந்த படத்திற்கு தமிழின் வல்லின எழுத்துக்களான 'கசடதபற' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு எழுத்தும் ஒரு ஹீரோவின் பெயர்களில் உள்ள எழுத்தாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் டைட்டில் போஸ்டரை நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் சற்றுமுன் வெளியிட்டுள்ளார். இந்த படத்தை இயக்குனர் வெங்கட்பிரபுவின் பிளாக் டிக்கெட் கம்பெனியும் டிரிடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கவுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்படத் தொகுப்பு!

அழகுப் பதுமை தமன்னாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஸ்!

ரோஜா ரோஜா பாட்டால் கவனம் ஈர்த்த சத்யன் மகாலிங்கத்துக்கு ‘பைசன்’ படத்தில் வாய்ப்பு!

படிப்புக்கும் நடிப்புக்கும் சம்மந்தம் இல்லை என்பது தாமதமாகதான் புரிந்தது- அனுபமா பரமேஸ்வரன் கருத்து!

கார்த்தியின் ‘மார்ஷல்’ படத்தில் இணைந்த சத்யராஜ்!

அடுத்த கட்டுரையில்
Show comments