Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2018 பட இயக்குனரோடு கைகோர்க்கும் சிம்பு… இந்த சூப்பர் ஸ்டார் நடிகரும் இருக்காரா?- கசிந்த தகவல்!

vinoth
புதன், 10 ஜூலை 2024 (07:19 IST)
கடந்த ஆண்டு மலையாளத்தில் உருவாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற  திரைப்படம் டோவினோ தாமஸ் நடித்த 2018. கடந்த 2018 ஆம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை ஒட்டி இந்த படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குனர் ஜூட் ஆண்டனி. இந்த படம் சுமார் 200 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்து மலையாள சினிமாவின் அதிகபட்ச வசூல் செய்த படமாக உருவாகியுள்ளது.

இந்தியா சார்பாக ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட இந்த படம் ஆஸ்கர் விருதின் பட்டியலில் 15 படங்கள் அடங்கிய இறுதிப் பட்டியலில் தேர்வாகவில்லை. இந்த படத்தின் இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் அடுத்ததாக தமிழில் ஒரு படத்தை இயக்க லைகா நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இதுவரை அவர் இயக்கும் படம் தொடர்பான தகவல்கள் வெளியாகாத நிலையில் இப்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அவர் இயக்கும் அடுத்த படத்தில் சிம்பு மற்றும் மோகன் லால் ஆகியோர் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. சிம்பு நடிப்பில் தேசிங் பெரியசாமி இயக்க இருந்த திரைப்படம் கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில், சிம்புவின் அடுத்த படமாக இது இருக்கும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments