Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாலு படத்தில் சிம்புவின் தாறுமாறு கெட்டப்புகள்

Webdunia
வெள்ளி, 3 ஜூலை 2015 (09:43 IST)
வாலு படம் ஜுலை 17 வெளியாகிறது. சிம்பு, ஹன்சிகா, சந்தானம் நடித்துள்ள இந்தப் படத்தை விஜய் சந்தர் இயக்க, தமன் இசையமைத்துள்ளார். நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி தயாரிப்பு.
படம் முடிந்தும் வெளியகாமல் தள்ளிப் போனதால் சிம்புவின் தந்தை டி.ஆர். படத்தை வெளியிடும் பொறுப்பை எடுத்துக் கொண்டார். அவரது சிம்பு சினி ஆர்ட்ஸ் படத்தை வெளியிடுகிறது.
 
வாலு படத்தில் தாறுமாறு எனத் தொடங்கும் பாடல் மட்டும் படமாகாமல் இருந்தது. இந்தப் பாடலில் சரோஜாதேவி, குஷ்பு, சிம்ரன் ஆகியோரை ஆட வைக்கயிருப்பதாக கூறப்பட்டது. தற்போது சிம்பு, ஹன்சிகாவை மட்டும் வைத்து பாடலை படமாக்கி வருகின்றனர்.
 
இந்தப் பாடலில் எம்.ஜி.ஆர், ரஜினி, அஜித் ஆகியோரின் கெட்டப்பில் சிம்பு தோன்றுகிறார். சென்னையில் அரங்கு அமைத்து பாடலை படமாக்கி வருகின்றனர். நாளைவரை இந்தப் படப்பிடிப்பு நடைபெறும் என கூறப்படுகிறது.

மறுபடியும் பழைய சினிமாவை நோக்கி போயிட்டோம்! திரும்ப நடிக்க மாட்டேன்! - கமல்ஹாசன் ஓப்பன் டாக்!

'தேவரா' திரைப்படத்தில் இருந்து அனிருத் ரவிச்சந்தர் இசையில் முதல் சிங்கிள் 'ஃபியர்

’இந்தியன் 2’ படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி.. ஷங்கர் அறிவிப்பு.. சிங்கிள் பாடல் எப்போது?

அந்த ஆளே பண்ணியிருக்கார் நமக்கு என்னன்னு நினைச்சேன்!.. எம்.ஜி.ஆர் குறித்து ராதா ரவி கொடுத்த ஓப்பன் டாக்!.

விஜய்யுடன் கடைசியாக நடிக்க போகும் நடிகை யார் தெரியுமா?

Show comments