சில்லுனு ஒரு காதல்னு ஒரு கத பண்ணவேண்டியது… மேடையில் சிம்பு பகிர்ந்த தகவல்!

Webdunia
திங்கள், 20 மார்ச் 2023 (07:49 IST)
பல இழுபறிகளுக்கு பிறகு சிம்பு நடிக்கும் பத்து தல திரைப்படம் ரிலீஸ் கட்டத்தை நெருங்கியுள்ளது. மார்ச் மாதம் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆடியோ வெளியீடு வரும் மார்ச் 18 ஆம் தேதி நடக்க உள்ளது. சமீபத்தில் படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடந்தது. அதில் படத்தின் நாயகன் சிம்பு உள்ளிட்ட அனைவரும் கலந்துகொண்டனர்.

அப்போது உணர்ச்சி பெருக்கோடு ஆவேசமாக பேசிய சிம்பு “நான் திரும்பி வேற மாரி வந்துட்டேன். இனிமே நான் உங்கள (ரசிகர்களை) தலைகுனிய வைக்க மாட்டேன். நான் செய்யப் போறதா ஜாலியா ஏசி ரூம்ல உக்காந்துட்டு பாருங்க” என்றார்.

பின்னர் படத்தின் இயக்குனர் கிருஷ்ணா குறித்து பேசும்போது “நான் தம் படம் நடிச்சு முடிச்சதும் ஜில்லுனு ஒரு காதல்-ன்னு கிருஷ்ணாவோடு ஒரு படம் பண்ண வேண்டியது. ஆனா அது வேற கதை. அப்ப பண்ணிருந்தா ஒரு தலதான் கெடச்சிருக்கும். இப்போது பத்து தல கெடச்சிருக்கு” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எனக்கும் நாகேஷுக்கும் மட்டும்தான் அது தெரியும்.. இப்படிலாம் நடந்திருக்கா?

மகேந்திரன் பற்றி சொன்னதுல என்ன தப்பு? ராஜகுமாரனுக்காக வக்காளத்து வாங்கும் பயில்வான் ரங்கநாதன்

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments