Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சினிமாவில் 40 ஆண்டுகள் நிறைவு… சிம்புவின் ‘சிலம்பாட்டம்’ ரி ரிலீஸ்… !

vinoth
சனி, 23 நவம்பர் 2024 (15:03 IST)
சமீபகாலமாக சிம்பு தனது ஒவ்வொரு படத்துக்கும் இடையில் பெரிய இடைவெளியை எடுத்துக் கொள்கிறார். பத்து தல படத்துக்குப் பிறகு சிம்பு நடிப்பில் எந்த படமும் இன்னும் ரிலீஸாகவில்லை. தற்போது கமல்ஹாசனோடு தக் லைஃப், அஸ்வத் மாரிமுத்து இயக்கும் படம் மற்றும் தேசிங் பெரியசாமி இயக்கும் படம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் சிம்பு சினிமாவில் அறிமுகமாகி 40 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். அவருடைய தந்தை T ராஜேந்தர் இயக்கி நடித்த உறவைக் காத்த கிளி திரைப்படத்தில் சிம்பு ஒரு வயது குழந்தையாக நடித்திருந்தார். அதன் பிறகு TR இயக்கிய பல படங்களில் சிம்பு குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

பின்னர் காதல் அழிவதில்லை திரைப்படத்தின் மூலம் ஹீரோவான சிம்பு இதுவரை 47 படங்களில் நடித்துள்ளார். உறவைக் காத்த கிளி திரைப்படம் ரிலீஸாகி 40 ஆண்டுகள் ஆகியுள்ளதை அடுத்து TR சிம்புவின் 40 ஆண்டுகால சினிமா வாழ்க்கையைக் கொண்டாட தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் சென்னை வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் சிம்பு நடித்த  படங்களில் ஒன்றான ‘சிலம்பாட்டம்’ ரி ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இதை சிம்பு ரசிகர்கள் கூட்டமாக வந்து கண்டு களித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டைலிஷான உடையில் கலக்கலானப் போஸில் ஆண்ட்ரியா… வைரல் க்ளிக்ஸ்!

சுருள்முடி அழகி அனுபமா பரமேஸ்வரனின் அழகிய க்ளிக்ஸ்!

கார்த்தி அடுத்த படத்திற்காக ஒரு கிராமத்தையே செட் போடும் கலை இயக்குனர்.. இயக்குனர் யார்?

எனக்கு இந்தில நடிக்கணும்னு தோனல.. ஏனென்றால்? – சிம்ரன் பகிர்ந்த தகவல்!

’ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் ஒரு புதுமை.. விஜய்யின் ராஜதந்திரம் எடுபடுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments