Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நள்ளிரவில் வெளியான சிம்புவின் அடுத்த பட அறிவிப்பு.. பிறந்த நாளில் ஒரு சூப்பர் விருந்து..!

Siva
திங்கள், 3 பிப்ரவரி 2025 (07:42 IST)
நடிகர் சிம்பு இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரது பிறந்தநாளில் அவர் நடிக்க இருக்கும் மூன்று படங்களின் அறிவிப்பு வெளியாகும் என்று செய்திகள் வெளியானது.

இந்த நிலையில், சரியாக நள்ளிரவு 12 மணிக்கு சிம்பு நடிக்க இருக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின்படி, சிம்பு நடிக்கும் அடுத்த திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே ஹரிஷ் கல்யாண் நடித்த "பார்க்கிங்" என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த படத்தை டான் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனம் ஏற்கனவே தனுஷ் நடித்து வரும் "இட்லி கடை" உள்பட சில படங்களை தயாரித்து வருகிறது.

ஏற்கனவே, சிம்பு, கமல்ஹாசனுடன் நடித்த "தக்லைப்" திரைப்படம்  ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில், அவர் அடுத்ததாக ராம்குமார், அஸ்வத் மற்றும் தேசிங்கு பெரியசாமி ஆகியோர் இயக்கத்தில் உள்ள படங்களிலும் நடிக்க உள்ளார். இந்த படங்களின் அறிவிப்புகளும் என்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தலைமறைவான நடிகர் கிருஷ்ணா.. ஒரே நாளில் தனிப்படையிடம் சிக்கி கைது.. தீவிர விசாரணை..!

ஹாலிவுட் படத்தில் நடிகை வரலட்சுமி.. சவுதி அரேபியாவில் நடந்த உண்மை சம்பவம் தான் கதை..!

நீ என் படத்தில் நடி.. நான் உன் படத்துல நடிக்கிறேன்.. கார்த்தி - நானி இடையே நட்பு ஒப்பந்தம்?

சினிமாவில் அறிமுகமாகும் தேவயானி மகள்.. தியாகராஜன் - பிரசாந்த் கொடுக்கும் வாய்ப்பு..!

அஜித்தை சந்திக்க துபாய் செல்கிறாரா தனுஷ்? கதை ஓகே ஆனால் எப்போது படப்பிடிப்பு?

அடுத்த கட்டுரையில்
Show comments