Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தயவு செஞ்சு அப்டேட் கேக்காதீங்க… ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த சிம்பு!

Webdunia
வியாழன், 10 நவம்பர் 2022 (16:08 IST)
தினமும் அப்டேட் கேட்டு படக்குழுவினருக்கு அழுத்தம் கொடுக்காதீர்கள் என்று சிம்பு பேசியுள்ளது வைரலாகி வருகிறது.

செப்டம்பர் மாதம் வெளியான வெந்து தணிந்தது காடு படத்தின் ஐம்பதாவது நாளை முன்னிட்டு நேற்று படத்தின் வெற்றி விழா சென்னையில் நடந்தது. அதில் சிம்பு உள்ளிட்ட படக் கலைஞர்கள் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய சிம்பு “தயவு செய்து ஒரு படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரிடம் தினமும் அப்டேட் கேக்காதீர்கள். உங்களுக்காக தான் நாங்கள் படங்கள் எடுக்கிறோம். நீங்கள் அப்டேட் கேட்டுக்கொண்டே இருந்தால், அவர்களுக்கு அழுத்தம் அதிகமாகி தவறான ஏதாவது ஒரு முடிவை எடுத்துவிடுவார்கள். என் படத்துக்கு மட்டும் இல்லாமல் எந்த படமாக இருந்தாலும் அப்டேட் கேட்டுக்கொண்டே இருக்காதீர்கள்” எனக் கூறியுள்ளார்.

மேலும் இதே நிகழ்ச்சியில் “இப்போது தமிழ் சினிமாவின் பொற்காலம் நடந்து கொண்டு இருக்கிறது. சமீபத்தில் ரிலீஸான எல்லா தமிழ் படங்களும் வெற்றி பெற்று நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. மக்கள் வித்தியாசமான திரைப்படங்களை ரசிக்கத் தொடங்கிவிட்டார்கள்.” எனவும் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments