சிம்புவின் பத்து தல ஷூட்டிங் எங்கே? எப்போது?… வெளியான செம்ம தகவல்!

Webdunia
வியாழன், 21 ஏப்ரல் 2022 (09:00 IST)
சிம்பு நடிக்கும் பத்து தல படத்தின் படப்பிடிப்பு கர்நாடக மாநிலத்தில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கன்னடத்தில் ஹிட்டடித்த மப்டி படத்தை தமிழில் முதலில் அதே பெயரில் ரீமேக் செய்ய முடிவெடுத்தார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. இந்த படத்தின் நாயகனாக கௌதம் கார்த்திக்கும், முக்கியமான ஒரு வேடத்தில் சிம்பு நடிக்கவும் ஒப்பந்தமாகி சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. ஆனால் அதன் பிறகு சிம்பு படப்பிடிப்பில் கலந்து கொள்ளாததால் நிறுத்தப்பட்டது.

இப்போது சில பல மாற்றங்களோடு அந்த படம் மீண்டும் தொடங்கப்பட்டு சிம்பு இல்லாத மற்ற காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு விட்டன. சிம்புவுக்காக படக்குழு காத்திருக்கிறது. இந்நிலையில் இப்போது வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் பத்து தல படத்தில் கவனம் செலுத்த உள்ளார் சிம்பு.

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்லாரி பகுதியில் அடுத்து நடக்க உள்ள படப்பிடிப்பில் சிம்புவும் கலந்துகொள்கிறார். அங்கு 20 நாட்கள் படப்பிடிப்பு நடக்க உள்ள நிலையில் மொத்தமாக சிம்புவின் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாம். இதன் பின்னர் சிம்பு கொரோனா குமார் படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திருமணம் செய்ய வேண்டாம் என பேத்திக்கு அறிவுரை கூறுவேன்: அமிதாப் மனைவி ஜெயா பச்சன்..!

உண்மை தெரிந்திருந்தால் மோகன் ஜி படத்தில் பாடியிருக்க மாட்டேன்: பாடகி சின்மயி

சமந்தா திருமணம் யோக விஞ்ஞானத்தின் அடிப்படையில் நடந்தது ஏன்? பரபரப்பு தகவல்..!

திருமண புகைப்படங்களை வெளியிட்ட சமந்தா.. குவியும் வாழ்த்துக்கள்

வாழவைத்த தமிழ் சினிமா! விருது வாங்கிய ரஜினிக்கு கோலிவுட் கொடுத்த கிஃப்ட்

அடுத்த கட்டுரையில்
Show comments