Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிம்புவின் அடுத்த படத்தை இயக்கப் போவது இந்த இயக்குனர்தான்.. கழட்டிவிடப்பட்ட தேசிங் பெரியசாமி!

vinoth
சனி, 29 ஜூன் 2024 (12:02 IST)
பத்து தல படத்துக்குப் பிறகு சிம்பு அடுத்து தேசிங் பெரியசாமி இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்துக்கான முன் தயாரிப்புப் பணிகள் நடந்துவரும் நிலையில் சிம்பு படத்துக்காக நீளமாக முடிவளர்த்து கெட்டப்பை எல்லாம் மாற்றினார்.

இந்த படத்துக்கான முன்தயாரிப்புப் பணிகள் முடிய இன்னும் சில மாதங்கள் ஆகும் என சொல்லப்பட்டது. இதற்கிடையில் சிம்பு கமல்ஹாசனின் தக்லைஃப் படத்தில் நடிக்க சென்றுவிட்டார். இந்நிலையில் கமல்ஹாசன் இந்த படத்தின் அதிக பட்ஜெட் காரணமாக தேசிங் பெரியசாமி படத்தைக் கைவிட்டு விட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் இது சம்மந்தமாக சிம்புவிடம் பேசி எதிர்காலத்தில் வேறு ஒரு படத்தில் இணைவோம் என்றும் கூறிவிட்டாராம். இந்த படத்துக்காக கொடுத்த அட்வான்ஸை தக்லைஃப் படத்துக்காக பயன்படுத்திக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சிம்பு இப்போது தன்னுடைய அடுத்த பட வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். டைனோசர்ஸ் என்ற படத்தை இயக்கிய இயக்குனர் எம் ஆர் மாதவன் இயக்கத்தில் அவர் ஒரு படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த படத்தை சிம்புவுக்கு ஏற்கனவே முன்பணம் கொடுத்துள்ள வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

செஸ் சாம்பியன் குகேஷை சந்தித்து பரிசளித்த சிவகார்த்திகேயன்!

கமல்ஹாசனுக்காக எழுதிய கதையை மம்மூட்டியை வைத்து இயக்கும் பிரபல இயக்குனர்!

மீண்டும் தாணு தயாரிப்பில் படம் நடிக்கும் விஜய் சேதுபதி!

சல்மான் கான் பிறந்தநாளில் வெளியாகும் ‘சிக்கந்தர்’ ப்ரமோஷன் வீடியோ!

நாளை வெளியாகிறது விடாமுயற்சி படத்தின் முதல் சிங்கில் ‘Sawadeeka’!.. டிரைலர் எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments