Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'பேனர் வைங்க, அண்டா அண்டாவா பால் ஊத்துங்க! சிம்புவின் அதிர்ச்சி வீடியோ

Webdunia
செவ்வாய், 22 ஜனவரி 2019 (09:22 IST)
சிம்புவின் 'வந்தா ராஜாவாதான் வருவேன்' என்ற திரைப்படம் வரும் பிப்ரவரியில் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் சிம்பு தனது ரசிகர்களுக்கு அறிவுரை கூறும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் தனது படம் வெளியாகும் தினத்தில் ரசிகர்கள் பேனர், கட் அவுட் வைப்பது, அதற்கு பாலாபிஷேகம் செய்வது போன்ற காரியங்களில் ஈடுபட வேண்டாம். அதற்கு பதிலாக உங்கள் அம்மாவுக்கு ஒரு புடவையோ, அப்பாவுக்கு ஒரு சட்டையோ வாங்கி கொடுத்தால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார்/

சிம்புவின் இந்த வீடியோவுக்கு பெரும் பாராட்டு கிடைத்த போதிலும் ஒருசிலர் 'சிம்புவுக்கு இருப்பதே ஒன்றிரண்டு ரசிகர்கள் தான். இதற்கு இந்த பில்டப் தேவையா? என்று கலாயத்தனர்.

இதனையடுத்து தற்போது சிம்பு ஒரு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், ''வந்தா ராஜாவாதான் வருவேன்'  பட ரிலீசின்போது கட் அவுட், பாலாபிஷேகம் வேண்டாம் என்று கூறியதை ஒருசிலர் கிண்டல் செய்துள்ளனர். எனக்கு இருப்பதே ஒன்று, இரண்டு ரசிகர்கள் என்றும், விளம்பரத்திற்காக நான் அவ்வாறு கூறியதாகவும் கூறியுள்ளனர். எனவே அந்த ஒன்றிரண்டு ரசிகர்கள் எனக்கு கட் அவுட் வைங்க, அண்டா அண்டாவா பாலாபிஷேகம் செய்யுங்க, வேற லெவலில் கொண்டாடுங்க' என்று கூறியுள்ளார். சிம்புவின் இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

4 நாட்கள் தொடர் விடுமுறையில் ரிலீஸ் ஆகும் ‘கூலி’.. சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ஜொலிக்கும் அழகில் மிரட்டல் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

பாக்ஸிங் க்யூட்டி ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

இந்த படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க போராடினேன்… வீர தீர சூரன் ஹிட் குறித்து விக்ரம் மகிழ்ச்சி!

மூத்த நடிகர் அவர்கள் ரவிகுமார் காலமானார்… திரையுலகினர் அஞ்சலி!

அடுத்த கட்டுரையில்
Show comments