பிக்பாஸில் சிம்பு… அதிருப்தியில் படத் தயாரிப்பாளர்கள்!

Webdunia
வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (10:03 IST)
நடிகர் சிம்பு இப்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க உள்ளதால் அவர் நடிக்கும் படங்கள் தாமதமாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து விலகிக் கொள்வதாக சமீபத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் அறிவித்திருந்தார். இதனை அடுத்து கமல்ஹாசன் அளவுக்கு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் யார் என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் தற்போது நடிகர் சிம்பு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பதாகவும் இது குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட தாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்போது நிகழ்ச்சிக்கான ப்ரோமோ படப்பிடிப்பை முடித்துள்ளார் சிம்பு. அது தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாகி வருகிறது.. அடுத்து வாராவாரம் சனிக்கிழமை அவர் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார். 6 வார காலத்துக்கு அவரிடம் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. 

சிம்பு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதால் அவரின் அடுத்தடுத்த பட தயாரிப்பாளர்கள் கலக்கத்தில் உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் வெந்து தணிந்தது காடு படப்பிடிப்பு தாமதமாகும் என்றும் அதனால் அடுத்து அவர் நடிக்க உள்ள கொரோனா குமார் மற்றும் பத்து தல ஆகிய படங்கள் தொடங்குவதும் தாமதமாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்று வெளியேறுவது இந்த பெண் போட்டியாளரா? ரசிகர்கள் ஆச்சரியம்..!

அப்பாவ விட தெளிவா இருப்பாரு போலயே! ஜேசன் சஞ்சயை அசைக்க முடியாமல் திணறும் திரையுலகம்

காஜாமுகைதீன் தற்கொலை முயற்சி.. அஜித் காரணம் இல்ல.. உண்மையில் நடந்தது இதுதான்

அஜித்துக்கு 'ஜென்டில்மேன் ஓட்டுநர் ஆஃப் தி இயர் 2025' விருது.. இத்தாலி செய்த கெளரவம்..

ஒரு லட்சம் பேரா? மலேசியாவில் நடப்பது ஆடியோ லாஞ்ச் இல்ல.. விஜய்க்கு இதுதான் சரியான ஃபேர்வல்

அடுத்த கட்டுரையில்
Show comments