Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுஷ் படத்துடன் வெளியாகும் சிம்பு பட ட்ரெய்லர்

Webdunia
வெள்ளி, 11 ஜூலை 2014 (09:09 IST)
பிரபலமான நடிகரின் படம் வெளியாகும் போது அதனுடன் ஏதாவது ஒரு படத்தின் ட்ரெய்லரை வெளியிடுவது இந்தியில் பிரபலம். தமிழில் எப்போதாவது இதுபோல் நடக்கும். ஆனால் தனது படத்தின் ட்ரெய்லர் இன்னொரு நடிகரின் படத்துடன் வெளியாவதை பெரும்பாலும் தமிழ் நடிகர்கள் விரும்புவதில்லை.

ஆனால் நட்புக்கும் உண்டோ அடைக்கும்தாழ்...?

முன்பு படங்களில் பரஸ்பரம் சவால்விட்ட தனுஷும், சிம்புவும் இப்போது திக் ப்ரெண்ட்ஸ். பொது மேடையில் கட்டிப் பிடித்து, நாங்க இப்போ ப்ரெண்ட்ஸ் என்று அறிவித்தவர்கள் லண்டனில் ஒன்றாக நண்பர்களுடன் விடுமுறையை கழிக்கும் அளவுக்கு நட்பானது ஆச்சரியம். சரி, விஷயத்துக்கு வருவோம்.

தனுஷ் தயாரித்து நடித்திருக்கும் வேலையில்லா பட்டதாரி இந்த மாதம் திரைக்கு வருகிறது. இந்தப் படத்துடன் சிம்புவின் வாலு படத்தின் ட்ரெய்லரை வெளியிடுகின்றனர். வேலையில்லா பட்டதாரி வெளியாகும் திரையரங்குகளில் வாலு படத்தின் ட்ரெய்லர் காண்பிக்கப்படும்.

வாலு சக்ரவர்த்தியின் நிக் ஆர்ட்ஸ் தயாரித்திருக்கும் படம். சிம்பு, சந்தானம், ஹன்சிகா நடித்துள்ளனர். ரயில்வே காலனி பின்னணியில் நடக்கும் ரொமாண்டிக் காமெடிப் படம் இது. சிம்பு அதிகம் நம்பியிருக்கும் படமும் இது என்பது குறிப்பிடத்தக்கது.

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

Show comments