தயாரிப்பாளர் கிடைக்காமல் தவிக்கும் சிம்பு… எல்லாத்துக்கும் பட்ஜெட்தான் காரணமாம்!

vinoth
புதன், 31 ஜூலை 2024 (09:10 IST)
கடந்த 2022 ஆம் ஆண்டு மலையாளத்தில் உருவாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற  திரைப்படம் டோவினோ தாமஸ் நடித்த 2018. கடந்த 2018 ஆம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை ஒட்டி இந்த படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குனர் ஜூட் ஆண்டனி. இந்த படம் சுமார் 200 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்து மலையாள சினிமாவின் அதிகபட்ச வசூல் செய்த படமாக உருவாகியுள்ளது.

இந்த படத்தின் இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் அடுத்ததாக தமிழில் ஒரு படத்தை இயக்க லைகா நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதில் விக்ரம் நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது சிம்பு நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் தயாரிப்பு பொறுப்பில் இருந்து லைகா விலகிக் கொண்டதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது இந்த கதையை சிம்பு ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு அனுப்பினாராம். ஆனால் கதையின் மிகப்பெரிய பட்ஜெட் காரணமாக அதை தங்களால் தயாரிக்க முடியாது என்று சொல்லிவிட்டதாம். அதையடுத்து அதே கதையை இப்போது தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜுவுக்கு அனுப்பியுள்ளாராம் சிம்பு. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்தடுத்து ஃபுல் ட்ரீட்தான்.. ‘ஜனநாயகன்’ படத்தின் டிரெய்லர் எப்போ தெரியுமா? அதுமட்டுமா?

யாஷிகா ஆனந்தின் வித்தியாசமான ஃபோட்டோஷூட் ஆல்பம்!

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் கலர்ஃபுல் கலெக்‌ஷன்ஸ்!

பைசன் இசையமைப்பாளரை ஹீரோவாக்கும் பா ரஞ்சித்!

சிம்பு & வெற்றிமாறனின் ‘அரசன்’ படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம்… காரணம் ஐசரி கணேஷா?

அடுத்த கட்டுரையில்
Show comments