Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சந்தானம் படத்திற்கு இசையமைக்கும் சிம்பு..! - சர்ச்சையில் சிக்காமல் இருந்தால் சரி

சந்தானம் படத்திற்கு இசையமைக்கும் சிம்பு..! - சர்ச்சையில் சிக்காமல் இருந்தால் சரி
, ஞாயிறு, 18 டிசம்பர் 2016 (18:05 IST)
நகைச்சுவை நடிகர் சந்தானம் நடிக்க இருக்கும் "சக்க போடு போடு ராஜா" படத்திற்கு நடிகர் சிம்பு முதன்முறையாக இசையமைக்க உள்ளார்.


 

நடிசந்தானம் தற்போது நடித்து வரும் படம் ‘சக்க போடு போடு ராஜா’. விடிவி கணேஷ் தாயரிப்பில் உருவாகவிருக்கும் இப்படத்தை இயக்குனர் சேதுராமன் இயக்குகிறார். இப்படத்தில் சந்தானம், விவேக், விடிவி கணேஷ், ரோபோ ஷங்கர் உள்ளிட்ட கலக்கல் காமெடி நடிகர்கள் பலர் நடிக்கின்றனர்.

இந்த திரைப்படத்திற்கு இதுவரை பாடகராக மட்டுமே அறியப்பட்டு வந்த சிம்பு, இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளார். இதனை தங்களது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் சிம்புவும், சந்தானமும் அறிவித்துள்ளனர்.

”சக்க போடு போடு ராஜா படத்திற்காக முதன் முறையாக இசையமைப்பாளராக பணிபுரிய உள்ளேன். இது சந்தானத்திற்காக மட்டும்தான். புதிய பயணம் துவங்குகிறது. உங்களுடைய அன்பும் ஆதரவு தேவை” என சிம்பு தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் சந்தானம், ”எனது காட்ஃபாதரும், மனித நேயம் மிக்கவருமான சிம்பு முதன்முறையாக எனது சக்க போடு போடு ராஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். வாழ்த்துக்கள்.” என தெரிவித்துள்ளார்.

சிம்பு கடந்த ஆண்டு ’பீப்’ பாடல் மூலம் சர்ச்சையில் சிக்கியதுபோல சக்கை போடு போடு ராஜா படத்தில் சர்ச்சை பாடல் ஏதும் இல்லாமல் இருந்தால் சரி!..
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தல 57 படத்திற்காக பைக் ஓட்டி அசத்திய அஜித் (வீடியோ)