Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிம்புவை காலி செய்த சந்தானம்: அதிர்ச்சியில் ரசிகர்கள்

Webdunia
வியாழன், 7 பிப்ரவரி 2019 (07:42 IST)
விஜய் டிவியில் காமெடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி கொண்டிருந்த சந்தானத்தை நடிகர் சிம்புதான் தனது படத்தில் அறிமுகம் செய்தார். ஆனால் தற்போது சிம்புவின் படத்தை காலி செய்யும் அளவுக்கு சந்தானம் வளர்ந்துவிட்டது சிம்பு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

சிம்பு நடித்த 'வந்தா ராஜாவாதான் வருவேன்' திரைப்படம் கடந்த 1ஆம் தேதி வெள்ளியன்று வெளியானது. அதிகாலை காட்சிகள், பாலாபிஷேகம் என சிறப்பாக ரிலீஸ் ஆன இந்த படம் நெகட்டிவ் விமர்சனம் காரணமாக 90% திரையரங்குகளில்  இருந்து ஞாயிற்றுக்கிழமையுடன் தூக்கப்பட்டு மீண்டும் பேட்ட மற்றும் விஸ்வாசம் திரையிடப்பட்டது.

இந்த நிலையில் மீதி 10% திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருந்த சிம்பு படத்தை இன்று வெளியான சந்தானம் நடித்த 'தில்லுக்கு துட்டு 2' காலி செய்துவிட்டதாகவும், தற்போது 'வந்தா ராஜாவாதான்' வருவேன்' திரைப்படம் வாஷ் அவுட் ஆகிவிட்டதாகவும் கூறப்படுகிறது

சிம்புவுடன் திரையுலகிற்கு வந்த நடிகர்கள் இன்னும் ஸ்லிம்மாகவும், ஒவ்வொரு படத்திலும் நடிப்பை மெருகேற்றியும் வரும் நிலையில் சிம்பு தற்போதே பிரபுவுக்கு இணையாக எடை கூடிவிட்டதோடு மொக்கையான பில்டப் காட்சிகளுடன் நடித்து வருவதே அவரது வீழ்ச்சிக்கு காரணமாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வெற்றிமாறன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐஜியிடம் புகார் அளித்த வழக்கறிஞர்..!

கிளாமர் க்யூன் யாஷிகாவின் லேட்டஸ்ட் அசத்தல் புகைப்படத் தொகுப்பு!

ஸ்டைலிஷ் லுக்கில் ஹூமா குரேஷியின் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

அந்த இரண்டு படங்களுக்கு விருதுகள் இல்லாதது ஏமாற்றமே- வைரமுத்துவின் வாழ்த்துகளும் ஆதங்கமும்!

‘ஆடுஜீவிதம்’ படத்திற்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை? ரசிகர்கள் அதிருப்தி

அடுத்த கட்டுரையில்
Show comments