சிம்புவின் அடுத்த பட போஸ்டரை வெளியிட்ட பிரபல இயக்குனர்

Webdunia
வியாழன், 2 ஜனவரி 2020 (17:58 IST)
கடந்த இரண்டு ஆடுகளில் சிம்பு நடித்த ’செக்கச் சிவந்தவானம்’ மற்றும் ’வந்தா ராஜா தான் வருவேன்’ ஆகிய திரைப்படங்கள் மட்டுமே வெளியான நிலையில் அதற்கு பின் அவருடைய எந்தப் படமும் வெளியாகவில்லை என்பதால் அவரது ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
 
இந்நிலையில் வாலு படத்தை அடுத்து ஹன்சிகாவுடன் மீண்டும் சிம்பு இணைந்து நடித்த ‘மஹா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் புதிய அட்டகாசமான போஸ்டர் ஒன்றை சிம்புவின் ’மாநாடு’ படத்தை தயாரிக்க இருக்கும் சுரேஷ் காமாட்சி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த போஸ்டர் இணைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த போஸ்டரில் சிம்பு பைல்ட் கெட்டப்பில் உள்ளார் என்பதும் அவரது பின்னால் ஒரு விமானம் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே சிம்பு இந்த படத்தில் பைல்ட் கேரக்டரில் நடித்திருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது
 
சிம்பு, ஹன்சிகா, ஸ்ரீகாந்த், சனம் ஷெட்டி, தம்பி ராமையா, கருணாகரன், நந்திதா, மகத் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஜமீல் இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையில், மதி ஒளிப்பதிவில் ஜான் ஆபிரஹாம் படத்தொகுப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்தை வி.மதியழகன் தயாரித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாஸ்க் படத்தின் சிலக் காட்சிகளை இயக்கியதே வெற்றிமாறன்தானா?... தீயாய்ப் பரவும் தகவல்!

தனுஷை நம்பி 500 கோடி ரூபாய் முதலீடு செய்யும் தயாரிப்பாளர்… அடுத்தடுத்து மூன்று படங்கள்!

23 ஆண்டுகளுக்குப் பிறகு புதுமுக இயக்குனருக்கு விக்ரம் கொடுத்த வாய்ப்பு… யார் இந்த போடி ராஜ்குமார்…?

இயக்குனருக்கு செட்டில்மெண்ட்… மகுடம் பட பிரச்சனையைத் தீர்த்த விஷால் & கோ!

எந்த அப்டேட்டும் வேண்டாம் சார்… ரஜினிக்கு நெல்சன் வைத்த கோரிக்கை… பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments