இழுத்துக் கொண்டே செல்லும் தேசிங் பெரியசாமி படம்… சிம்பு எடுத்த அதிரடி முடிவு!

vinoth
சனி, 4 மே 2024 (07:52 IST)
பத்து தல படத்துக்குப் பிறகு சிம்பு அடுத்து தேசிங் பெரியசாமி இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்துக்கான முன் தயாரிப்புப் பணிகள் நடந்துவரும் நிலையில் சிம்பு படத்துக்காக நீளமாக முடிவளர்த்து கெட்டப்பை எல்லாம் மாற்றியுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னர் இந்த படத்தின் டெஸ்ட் ஷூட் ரகசியமாக சென்னையில் நடந்து முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது.  இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் மட்டுமே இதுவரை ரிலீஸானது. படத்தின் ஷூட்டிங் தொடங்குவதாக தெரியவில்லை.

இந்நிலையில் சிம்பு இப்போது கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தில் நடிக்க சென்றுவிட்டார். அதுமட்டுமில்லாமல் வேறு இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறாராம். அதில் கடந்த ஆண்டு வெளியான டைனோசர்ஸ் என்ற படத்தை இயக்கிய எம் ஆர் மாதவன் என்பவர் சொன்ன கதை அவருக்கு பிடித்துவிடவே அவரோடு இணைந்து படம் பண்ண தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சுருள்முடி அழகி அனுபமாவின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

பிரியங்கா மோகனின் க்யூட் வைரல் க்ளிக்ஸ்!

கைவிடப்பட்டதாக பரவிய வதந்தி… போஸ்டரோடு வெளியான பிரபுதேவா & வடிவேலு இணையும் படம்!

பிரபாஸின் அடுத்த பேன் இந்தியா படம் ‘ஸ்பிரிட்’… 100 நாட்களுக்குள் முடிக்கத் திட்டம்!

எனது கையில் ப்ளேடாக கிழித்தார்கள்! ரசிகர்கள் போர்வையில் விஷமிகள்! - அஜித் சொன்ன அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments