Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் பிக்பாஸ் ஐஸ்வர்யாவிற்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிம்பு

Webdunia
திங்கள், 5 நவம்பர் 2018 (08:57 IST)
சமீபத்தில் பிக்பாஸ் ஐஸ்வர்யா தனது பிறந்தநாளை சிம்புவுடன் கொண்டாடி உள்ளார்.
பிக்பாஸ் சீசன்1 இல் எப்படி ஓவியா படு ஃபேமஸ் ஆனாரோ பிக்பாஸ் சீசன் 2வில் பயங்கர ஃபேமஸ் ஆனவர் தான் ஐஸ்வர்யா. பிக்பாஸை ஒளிபரப்பிய சேனலும் ஐஸ்வர்யாவை வைத்து ஏகப்பட்ட டிஆர்பியை ஏற்றிக்கொண்டது. ஏனென்றால் ஐஸ்வர்யா இருக்கும் இடத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. ஐஸ்வர்யாவை சிலருக்கு பிடிக்காமல் போனாலும் பலருக்கு பிடித்துப் போய்விட்டது.
பிக்பாஸ்  வீட்டிலிருக்கும்போது வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட சென்றாயன், ஸ்பெஷல் கெஸ்டாக மீண்டும் வீட்டினுள் நிழைந்து சிம்பு தனது அடுத்த படத்தில் ஹீரோயினியாக ஐஸ்வர்யாவை புக் செய்ய உள்ளதாக கூறினார். இந்த திடீர் சர்ப்ரைஸால் ஐஸ்வர்யா மகிழ்ச்சியால் துள்ளி குதித்தார். ஆனால் அது சம்மந்தமான அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.
இந்நிலையில் ஐஸ்வர்யா சமீபத்தில் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார். அதில் அனிருத், மஹத் ஆகியோர் பங்கேற்றிருக்கின்றனர். திடீர் சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக சிம்பு அந்த பர்த்டே பார்டியில் கலந்து கொண்டிருக்கிறார். இதை வைத்து பார்க்கும்போது ஐஸ்வர்யா சிம்புவுடன் நடிக்கப்போவது உறுதி போல தான் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கடைசி நேரத்தில் 8 நிமிடங்கள் காட்சி நீக்கப்பட்டது: ‘விடுதலை 2’ குறித்து வெற்றிமாறன்..!

கிறிஸ்டோஃபர் நோலனுக்கு சர் பட்டம் வழங்கி கௌரவித்த பிரிட்டன் மன்னர்!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கண்கவர் புகைப்பட ஆல்பம்!

க்யூட் போஸில் கலக்கும் ‘பாபநாசம்’ புகழ் எஸ்தர்!

இந்தியன் 3 ஓடிடியில் ரிலீஸ் ஆகுமா?... இயக்குனர் ஷங்கர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments