Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிம்பு படத் தயாரிப்பாளரின் பிடிவாதம்....ரசிகர்கள் மகிழ்ச்சி

Webdunia
புதன், 16 ஜூன் 2021 (22:44 IST)
சிம்பு நடித்த ’மாநாடு’ திரைப்படத்தின்  முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை சுரேஷ் காமாட்சி மிகுந்த பொருட்செலவில் தயாரித்துள்ளார். மேலும் கல்யாணி பிரியதர்ஷன் இந்த படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.

 
இந்நிலையில் மாநாடு பட இசையமைப்பாளர்,  யுவன் சங்கர் ராஜா தனது டுவிட்டரில் ’மாநாடு’ படத்தின் சிங்கிள் பாடல் வரும் 21ம் தேதி வெளியாகும் என்று அறிவித்து உள்ளார். இதனை அடுத்து சிம்பு மற்றும் யுவன் சங்கர் ராஜா ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்து வருகின்றனர் .

இந்நிலையில்,  மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி,, எத்தனை நாட்கள் ஆனாலும் இப்படம்  தியேட்டர்களில்தான் ரிலீஸாகும் எனக் கூறியுள்ளார்.

மேலும், தற்போது இரண்டாது கொரோனா அலை குறைந்துள்ளதால், வரும் ஆயுதபூஜை விடுமுறைக நாட்களில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பொங்கலுக்கு தியேட்டர்களில் ரிலீஸான சிம்புவின் ஈஸ்வரன் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், இப்படத்தை வெற்றி பெறச் செய்ய சிம்பு ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முத்த மழை பாடல்! தீ பெஸ்ட்டா? சின்மயி பெஸ்ட்டா? - ஒப்பீடு குறித்து பாடகி சின்மயி கருத்து!

கமல் படத்தை ரிலீஸ் செய்தால் தியேட்டரை கொளுத்துவோம்! - கர்நாடக தியேட்டர்களுக்கு மிரட்டல்!

கரண்ட் போன 20 நிமிஷத்துல என்ன நடந்துச்சோ MI ஜெயிச்சிட்டாங்க! - ரவிச்சந்திரன் அஷ்வின்!

விஜய் டிவியில் மூன்று புதிய தொடர்கள்.. தொலைக்காட்சி ரசிகர்களுக்கு கொண்டாட்டம்..!

முன்பதிவு ஆரம்பித்தும் தியேட்டர் நிரம்பவில்லை.. என்ன ஆச்சு ’தக்லைஃப்’ படத்திற்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments