Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் சிம்பு, நயன்தாரா நெருக்கம்

மீண்டும் சிம்பு, நயன்தாரா நெருக்கம்
, சனி, 10 மே 2014 (13:12 IST)
முதல் காதலுக்கு இருக்கும் பவரே வேற என்பது சும்மாயில்லை. சிம்பு, நயன்தாரா நெருக்கத்தைப் பார்க்கையில் முதல் காதல் பற்றிய இந்த சொல்லடை உண்மைதான் என்று யாருக்கும் தோன்றும்.
சமீபத்தில் நடந்த த்ரிஷாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஆல்ஹகால் ஆறாக ஓடியது. அந்த ஆற்றங்கரையோரம் இளைப்பாறிய நட்சத்திரங்கள் நிறைய. அந்த விருந்தில் சிம்புவும் கலந்து கொண்டார். கூடவே நயன்தாரா, அமலா பால் என்று நிறைய நட்சத்திரங்கள்.
 
இந்த பிறந்தநாள் பார்ட்டியில் மிக நெருக்கமாக காணப்பட்டார்கள் சிம்புவும், நயன்தாராவும். அந்த நெருக்கத்தைப் பார்க்கும் யாருக்கும் இருவரும் காதலர்கள் என்றே நினைக்கத் தோன்றும், அந்தளவுக்கு நெருக்கம்.
 
காண்பதெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்போமன்றோ என்ற பாரதியின் வரிகள் சிம்பு - நயன்தாராவுக்கு சாலப்பொருத்தம்.
 

Share this Story:

Follow Webdunia tamil