Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிம்பு 50 படத்தை இயக்கப் போவது யார் தெரியுமா?... கடைசி நேரத்தில் மாறும் பெயர்!

vinoth
திங்கள், 2 டிசம்பர் 2024 (07:30 IST)
சிம்பு நடிப்பில் தேசிங் பெரியசாமி இயக்கத்தில், கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் ‘சிம்பு 48’ படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டே வெளியானது. ஆனால் அதன் பிறகு அந்த படம் அடுத்த கட்டம் நோக்கி நகரவேயில்லை. இதனால் பொறுத்துப் பொறுத்துப் பார்த்த சிம்பு கமல்ஹாசனின் தக்லைஃப் படத்தில் நடிக்க சென்று அந்த படத்தின் ஷூட்டிங்கும் முடிந்துவிட்டது.

இதனால் சிம்புவின் 48 ஆவது படமாக தக் லைஃப் அமைந்துள்ளது. இதற்கிடையில் சிம்பு அஷ்வத் மாரிமுத்து இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதனால் சிம்பு தேசிங் இணையும் படம் அவரின் ஐம்பதாவது படமாக இருக்கும் என சொல்லப்பட்டது. இந்நிலையில் சிம்பு & தேசிங் இணையும் படத்தை துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் கண்ணன் ரவி என்பவரை தயாரிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அது அடுத்தகட்டத்துக்கு செல்லவில்லை என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சிம்பு தற்போது தன்னுடைய 50 ஆவது படத்தைத் தானே இயக்க முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த படத்தை முடித்துவிட்டு அவர் தேசிங் இயக்கும் படத்தில் நடிப்பார் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’எம்புரான்’ சர்ச்சை காட்சிகள்.. வருத்தம் தெரிவித்தார் நடிகர் மோகன்லால்..!

ரொனால்டினோவை சந்தித்த அஜித் மகன் ஆத்விக்.. தலையை தடவி கொடுத்து ஆசி..!

’ரெடியா மாமே’.. அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் பாடல் வீடியோ ரிலீஸ்..!

சர்ச்சைக்குரிய காட்சிகள்! எம்புரானை எதிர்க்கும் சங் பரிவார்! - கேரள முதல்வர் ஆதரவு!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‘சந்தோஷ்’ ஓடிடியில் ரிலீஸ்! - நெட்டிசன்கள் தேட காரணம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments