Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிம்பு 49 படம் தொடங்குவதில் தாமதம்… இதுதான் காரணமா?

vinoth
வெள்ளி, 14 மார்ச் 2025 (08:25 IST)
சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ‘பத்து தல’ . அந்த படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை. அதன் பின்னர் அவர் கமல்ஹாசனோடு இணைந்து மணிரத்னம் இயக்கும் ‘தக் லைஃப்’ படத்தில் நடித்து வருகிறார். அந்த படம் ஜூன் 5 ஆம் தேதி ரிலீஸாகிறது.

இந்நிலையில் சமீபத்தில் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கவுள்ள மூன்று படங்களின் அறிவிப்புகள் வெளியாகின. சிம்பு – ராம்குமார் பாலகிருஷ்னன் இயக்கத்தில் உருவாகும் அவரது 49 ஆவது படம், சிம்பு- தேசிங் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் அவரது 50 ஆவது படம் மற்றும் சிம்பு –அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகும் அவரது 51 ஆவது படம் என மூன்று அறிவிப்புகள் வெளியாகின.

இதில் முதலில் ‘சிம்பு 49’ படம் தொடங்கும் என சொல்லப்பட்டது. ஆனால் இன்னும் படத்தின் திரைக்கதையை இயக்குனர் இறுதி செய்யாததால் படம் மே மாதத்தில்தான் தொடங்கும் என சொல்லப்படுகிறது. இந்த படத்தில் சிம்பு கல்லூரி மாணவர் மற்றும் கேங்ஸ்டராக நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

6 படங்களின் கதையும் ஒரே மாதிரியா? அதில் ரஜினி, அஜித் படங்களும் அடக்கம்.. ஆச்சரிய தகவல்..!

சிம்பு - வெங்கட்பிரபு படத்திற்கு வாய்ப்பே இல்லை.. சிம்புவின் லைன் - அப்பில் ‘மாநாடு 2’ இல்லையா?

காளி வேஷம்.. கையில சிலுவை.. ஆபாச நடனம்! - சர்ச்சைக்குள்ளான ஆல்பம் பாடல்!

மொட்டைத்தலையுடன் அஜித் கெட்டப்.. புதிய படத்திற்கான கேரக்டர் லுக்கா?

பிரியா வாரியரின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments