Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கற்பனை நாயாக நடிக்கும் பிரேம்ஜி - நாய்களுக்கு வந்த சோதனை...?

Webdunia
செவ்வாய், 6 அக்டோபர் 2015 (14:55 IST)
அண்ணன் படம் தவிர வேறு படங்களில் பிரேம்ஜி அதிகமாக நடிப்பதில்லை.


 

 
யாரும் அழைத்தால்தானே நடிப்பதற்கு? அப்படியே மாங்கா மாதிரி சில படங்களில் நடித்தாலும், தயாரிப்பாளர் நிலைமை கஷ்டமாகிவிடும்.
 
இந்த சரித்திர உண்மை குறித்து கவலைப்படும் ஆளில்லை, அறிமுக இயக்குனர் அரவிந்த் ஸ்ரீதர். அவர் இயக்கும் சிம்பா படத்தில் பிரேம்ஜி நடிக்கிறார். அதுவும் கற்பனை நாயாக.
 
சிம்பா படத்தின் கதை, போதை ஆசாமி ஒருவர் கதை சொல்வது போல் உருவாக்கப்பட்டுள்ளது. போதை ஆசாமியாக பரத் நடிக்கிறார்.
 
அவர் சதா பேசிக் கொண்டிருக்கும் கற்பனை நாய் கதாபாத்திரத்தில் பிரேம்ஜி வருகிறார். சூது கவ்வும் படத்தில் விஜய் சேதுபதியின் கற்பனையில் வரும் சஞ்சிதாவைப் போல்.
 
நாய் போன்ற உடைதான் படத்தில் ராம்ஜியின் காஸ்ட்யூம்.
 
அரவிந்த் ஸ்ரீதருக்கு அப்படியென்ன கோபமோ பிரேம்ஜி மீது.

மீண்டும் தொடங்கிய அஜித்தின் குட் பேட் அக்லி …!

சி எஸ் கே vs ஆர் சி பி போட்டியின் போது சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுக்கும் கமல் & ஷங்கர்- இந்தியன் 2 அப்டேட் எதிர்பார்க்கலாமா?

வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் & ஆண்ட்ரியா நடிக்கும் ‘மாஸ்க்’- பூஜையுடன் தொடக்கம்!

சல்மான் கான் படத்துக்காக சிவகார்த்திகேயன் படத்துக்கு பிரேக் விடும் முருகதாஸ்!

LUC பற்றிய டாக்குமெண்ட்ரி எடுக்கும் லோகேஷ் கனகராஜ்… டைட்டில் இதுதான்!

Show comments