Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரிலீசுக்கு முன்னரே சாதனை படைத்த சில்லுகருப்பட்டி படம்!

Webdunia
வெள்ளி, 20 டிசம்பர் 2019 (16:53 IST)
‘பூவரசம் பீப்பீ’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர், இயக்குநர் ஹலிதா ஷமீம். இப்போது ‘சில்லுகருப்பட்டி’ என்ற அந்தாலஜி ஸ்டைல் படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் சமுத்திரகனி மற்றும் சுனைனா நடிகின்றனர். இவர்களுடன் சாரா அர்ஜுன், நிவேதிதா சதீஷ், மணிகண்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 
 
இப்படத்தின் சிறப்பம்சமாக மனோஜ் பரமஹம்சா, அபிநந்தன் ராமானுஜன், யாமினி மூர்த்தி, விஜய் கார்த்திக் என திறமை மிக்க நான்கு ஒளிப்பதிவாளர்கள் பணியாற்றிருக்கிறார்கள். குமார் இசை அமைத்துள்ள இப்படம் நான்கு விதமான காதல் கதைகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.  படத்திற்கு பிரதீப் குமார் இசையமைத்துள்ள இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் ட்ரைலருக்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்தது. 
 
இந்நிலையில் தற்போது சில்லுகருப்பட்டி  படம்  சென்னை இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவலில் சிறந்த படங்களுக்கான தரவரிசையில் இரண்டாம் இடம் பெற்று ரிலீசுக்கு முன்னரே சாதனை படைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments