சிக்கந்தர் படம் தோல்விதான்.. ஆனா நான் காரணம் இல்ல! - கைவிரித்த முருகதாஸ்!

Prasanth K
ஞாயிறு, 17 ஆகஸ்ட் 2025 (12:10 IST)

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடித்த சிக்கந்தர் படம் தோல்வியடைந்தது குறித்து முருகதாஸ் பேசியுள்ளார்.

 

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்கள் ஒருவராக இருப்பவர் ஏ.ஆர்.முருகதாஸ். தமிழில் இவர் இயக்கி வெளியான கஜினி பெரும் ஹிட் ஆன நிலையில அப்போதே அதை ஹிந்தியில் ஆமீர் கானை வைத்தும் ஹிட்டாகியவர் முருகதாஸ். 

 

சமீபத்தில் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடித்து சிக்கந்தர் என்ற படம் வெளியானது. ராஷ்மிகா மந்தனா, சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்த அந்த படம் எதிர்பாராத தோல்வியை தழுவியது. அதை தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து முருகதாஸ் இயக்கியுள்ள மதராஸி படம் செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸாக உள்ளது.

 

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் சிக்கந்தர் தோல்வி குறித்து பேசிய முருகதாஸ் “சிக்கந்தர் படத்தின் கதை என் மனதிற்கு மிகவும் நெருக்கமானது. ஆனால் நான் நினைத்த கதையை திரையில் கொண்டு வர முடியவில்லை. அதற்கு படக்குழுவும் ஒரு காரணம். ஆதிக்கம் செலுத்தும் வகையில் ஒரு யூனிட் என்னிடம் இருந்திருந்தால் அதை சாத்தியப்படுத்தியிருக்கலாம். அது என்னுடைய தவறு அல்ல” என கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

லெஜெண்ட் சரவணாவை இயக்கும் ரத்னகுமார்! வைரலாகும் புகைப்படம்

பீகார் தேர்தல் தோல்விக்கு பிராயசித்தம்: மெளன விரதம் இருக்கும் பிரசாந்த் கிஷோர்!

அழகுப் பதுமை சம்யுக்தாவின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

அழகே அழகே… வாணி போஜனின் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

கமல்& அன்பறிவ் படத்துக்கு மலையாள இசையமைப்பாளர்… வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments