Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய டிவி தொடரில் ஜோடியாக நடிக்கும் நிஜ தம்பதிகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

Siva
வியாழன், 1 ஆகஸ்ட் 2024 (17:03 IST)
டிவி தொடரில் நடிக்கும் போது காதலித்து திருமணம் செய்து கொண்ட நிஜ தம்பதிகள் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் ஒரு டிவி தொடரில் ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

ஜீ டிவியில் ஒளிபரப்பான திருமணம் என்ற தொடரில் சித்து, ஸ்ரேயா ஆகிய இருவரும் ஜோடியாக நடித்த நிலையில் இருவருக்கும் காதல் மலர்ந்தது. இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பின்னர் ராஜா ராணி 2 தொடரில் சித்து நடித்தார் என்பதும் அதேபோல் ரஜினி என்ற தொடரில் ஸ்ரேயா நடித்திருந்தார் என்பதும் தெரிந்தது. இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இருவரும் சேர்ந்து நடிக்காத நிலையில் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய டிவி தொடரில் நடிக்க இருவரும் ஒப்பந்தம் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

இந்த புதிய தொடரின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் இந்த தொடரின் டைட்டில், டீசர் மற்றும் ஒளிபரப்பாகும் நேரம் குறித்த தகவலை ஜீடிவி விரைவில் தெரிவிக்கும் என்றும் கூறப்படுகிறது.

நீண்ட இடைவேளைக்கு பிறகு சித்து மற்றும் ஸ்ரேயா தம்பதிகள் ஒரே தொடரில் நடிகை இருப்பதை அடுத்து அவர்களது ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எம் ஜி ஆருக்கு நாடோடி மன்னன்… ரஜினிக்கு ‘பாட்ஷா’.. இரண்டிலும் RMV-மலரும் நினைவுகளைப் பகிர்ந்த வைரமுத்து!

சேரன் இயக்கத்தில் ’அய்யா’… ராமதாஸ் பிறந்தநாளில் வெளியான முதல் லுக் போஸ்டர்!

ஹெச் வினோத் & தனுஷ் இணையும் படத்துக்கு இவர்தான் இசையமைப்பாளர்!... வெளியான தகவல்

விஜயகாந்தின் ஆல்டைம் பிளாக்பஸ்டர் ஹிட் ‘கேப்டன் பிரபாகரன்’ ரி ரிலீஸ்… தேதி அறிவிப்பு!

இளையராஜாவின் சிம்ஃபொனி நிகழ்ச்சி சென்னையில் எப்போது?.. ஆலோசனை!

அடுத்த கட்டுரையில்
Show comments