Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலும் காதல் பிரிவும்.. எப்படி இருக்கிறது சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்!

vinoth
புதன், 13 நவம்பர் 2024 (09:04 IST)
கடந்த சில ஆண்டுகளாக தோல்விப் படங்களாகக் கொடுத்து வந்த சித்தார்த் ‘சித்தா’ என்ற திரைப்படத்தின் மூலம் வெற்றிப் பாதைக்கு திரும்பினார்.  பெண் குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறலை புதிய பரிமாணத்தில் சித்தா படம் காட்டியிருந்ததால் பெரிய அளவில் கவனம் பெற்றது.

இதையடுத்து 7 மைல்ஸ் பெர் செகண்ட் நிறுவனம் சார்பில் சாமுவேல் மேத்யூ தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘மிஸ் யூ’  N.ராஜசேகர் இயக்கியுள்ள இந்த படத்தில் சித்தார்த் கதாநாயகனாக நடிக்க, ஆஷிகா ரங்கநாத் கதாநாயகியாக நடிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் மற்றும் மூன்று பாடல்கள் ஏற்கனவே ரிலீஸாகி கவனம் பெற்றன. இந்நிலையில் தற்போது படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. சித்தார்த் தன்னுடைய காதலியிடம் காதலை தெரிவிக்க, அவர் அதற்கு மறுப்பு தெரிவிக்க அதன் பின்னான சம்பவங்களே கதையாக இருக்கும் என டீசர் காட்டுகிறது. படம் நவம்பர் 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வெளி தயாரிப்பாளர் படத்தில் கமல் நடிக்க மாட்டாராம்.. 10 வருஷமா அதுதானே நடக்கிறது?

கமல் படத்தில் நடிக்க மறுத்துவிட்டாரா சாய்பல்லவி? என்ன காரணம்?

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கிளாமரஸ் க்ளிக்ஸ்!

எந்த பக்கம் நீ நின்றாலும் அந்த பக்கம் கண்கள் போகும்… க்யூட் லுக்கில் சமந்தா அசத்தல்!

அடுத்த கட்டுரையில்